பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

ஆக்கியது? வன்ருெண்டரைக் காணு விடத்து, அவனே என் முன் காணும் நாள் எந்நாள்?’ என்று கழறியவர்,

' வரவெதிர் காண்பேன் ஆகில் வருவதென் ஞங்கொல்?" என்று கறுவியவர், கானும் வாய்ப்புப் பெற இருந் தும் தம்மையே அன்ருே தாக்கிக்கொண்டார் ? இதுவே சாத்துவிகப் போர். இ வ் வு ண ர் வு இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரேயிருந் ததை நோக்க நாம் இறும்பூது கொள்ள வேண்டும் அன்ருே?

கணவனுர்க்கு அருகே இருந்து ஆவன செய்து வந்தார் கலிக்காம. மனேவியார்; அல்லும் பகலும் அவரை விட்டு அகலாதிருந்தார் ;

" தோன்றற்கும் தோகைக்கும் ஒன்ருய் வரும்

இன்பத் துன்பங்கள் . எ ன் னு ம் இலக்கணத்திற்கோர் இலக்கியமாய்க் கலிக்காமர் சூலையால் பட்ட துன்பம் எல்லாம் தமக்கு வந்தாற்போலத் தாமும் உணவு இன்றி, உறக்கம் இன்றி, உபசாரம் செய்து வந்தார். இந் நிலையில் ஆசிரியர், சேக்கிழார்,

' கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர்

என்றும், அவர்,

‘ தேவியார்க்குப் பொருவருங் கணவர் ’ என்றும் போற்றுகின்றர். அன்ன பண்பிளுர் மறைந் தார் என்ருல் மாதரர் மண்ணில் வாழ்வரோ? உடன் போகத் துணிந்தது உசிதமே.