உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்

தோற்றுவாய்

ஒரு துறையில் பணிபுரியும் ஒருவர், தன் துறையோடு முற்றிலும் வேறுபட்ட பிறிதொரு துறையில் பணிபுரிவாரைப் பாராட்டுவது இயல்பு. ஆனால், ஒரே. துறையில் ւտուրում இருவர், ஒருவரையொருவர் பாராட்டக் காணல் இயலாது. அவர்கள் ஒருவர்மீது ஒருவர் காழ்ப்புணர்வு கொள்ளாது ஒத்த உள்ளம் உடையராதலே அரிது; ஆதலின், ஒருவரையொருவர் புகழ்ந்து பாராட்டுவது அரிதினும் அரிதாகும்.

இஃது, ஆடவர் பெண்டிர் இருபால்ார்க்குமே ஏற்கும். ஓர் ஆடவனைப் பல பெண்டிர் பாராட்டுவதும், ஒரு பெண்ணைப் பல ஆடவர் பாராட்டுவதும் உலகெங்கும் காணும் பொது நிகழ்ச்சிகளாம். ஆனால், ஒர் ஆடவனை, மற்றோர் ஆடவனே பாராட்டுவதும்,