உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'8 அ புலவர் கா. கோவிந்தன்

ஒரு பெண்ணைப் பிறிதொரு பெண்ணே பாராட்டுவதும் காண இயலாக் காட்சிகளாம்.

ஒரு துறையார் பிறிதொரு துறையாரைப் பாராட்டுவதும், ஆண் இனம் பெண் இனத்தைப் பாராட்டுவதும், பெண் இனம். ஆண் இனத்தைப் பாராட்டுவதுமாகிய ஆங்கே இருதிறத்தவரும் வேறுவேறு துறையினர்; வேறுவேறு நிலையினர்; இருவர்தம் விழைவும் வேறுவேறு; வெறுப்பும் வேறுவேறு. ஆகவே, ஒருவரால் ஒருவர் கேடுற்றுப் ப்ோவதில்லை. அதனால், அவரிடையே போட்டியோ, பொறாமையோ எழுதற்கு வாய்ப்பில்லை; ஆகவே, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்ளும் அப்பாராட்டு பெரிய பாராட்டு ஆகாது. மாறாக, ஒரு துறையார் அதே துறையாரைப் பாராட்டவேண்டும்; ஆண், ஆணைப் பாராட்ட வேண்டும்; பெண் பெண்ணைப் பாராட்டவேண்டும். ஈண்டுப் பாராட்டு வோரும் பாராட்டப்படுவோருமாகிய இருவரும் ஒரே துறையினர்; ஒரே நிலையினர்; இருவர்தம் வேட்கையும் ஒன்றாகும்; வெறுப்பும் ஒன்றாகும். வேட்ட பொருள் ஒன்றேயாகி, ஒருவர்க்குக் கிடைக்க, ஒருவர் . அது கிடைக்கப்பெறாது ஏங்க நேரிடுவதாலும், வெறுத்த ஒன்று ஒருவரைச் சென்று அடையாது, பிறிதொரு வரைச் சென்று அடைய, அவர் துன்புற நேரிடுவ தாலும், ஒத்தநிலையின்ர், ஒரே துறையினராகவும், ஒருவரின் ஒருவர் உயர்ந்தும் தாழ்ந்தும் போக, அதன் பயனாய் ஒருவரை யொருவர் வெறுப்பதும்