பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 107 கூறியிருப்பது காண்க. 'கோளி பூவாது காய்க்கும் குளிர் மரம்' என்பது திவாகர நிகண்டு (4-80) நூற்பா அடுத்து ஆல மரத்துக்குச் செல்லலாம்: 'கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்துக் கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின்’ (மலைபடு கடாம்: 268-69 'முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் - கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்கு' (புற நானூறு 58; 2,3) 'முன்னூர்ப் பழுநிய கோளி ஆலத்துப் புள்ளார் யாணர்த் தற்றே (புறம்-254:7,8) ஆலமரத்தைப் பறவைகள் சூழ்ந்திருப்பதாகவும் அடி தொலைந்த ஆல மரத்தை விழுதுகள் தாங்கிக் காப்ப தாகவும் கூறப்பட்டுள்ள இப்பாடல் பகுதிகளில், ஆல மரம் 'கோளி ஆலம்' என இணைத்தே கூறப்பட்டிருப்பது கருதற்பாற்று. திவாகர நிகண்டும் சூடாமணி நிகண்டும் இன்னும் ஒரு படி மேல் நோக்கிச் சென்றுள்ளன. ஆல மரத்தின் பெயர் களுள் கோளி என்பதும் ஒன்று என அவை கூறுகின்றன: 'பூதவம், கான் மரம், வட மரம், தொன் மரம், ஒதிய பழு மரம், கோளி, ஆலே' (திவாகரம்-மரப் பெயர்த் தொகுதி-8) 'படருந் தொன்மரமே, கோளி, பழுமரம், ஆலின் பெயரே' (சூடாமணி-மரப் பெயர்த் தொகுதி - 14) என்பன அந்நிகண்டு நூற்பாப் பகுதிகள். வேறு சில நிகண்டுகளும் இவ்வாறு கூறியுள்ளன. பூவாது காய்க்கும் மரங்கள் என்பது பற்றி இப்போது நன்கு விளங்கலாம். பூவாது காய்க்கும் மரங்களைக் குறிக்கும் பெயர்கள் உடற் கூறால் பெறப்பட்டவை எனலாம்.