பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஒரு கண்ணோட்டம் 1. பொது விதி மர இனங்களைக் குறிப்பனவாக, மக்கள் அனைவரும் அறிந்த பெயர்கள் இருக்க, அவற்றிற்கு மாற்றுப் பெயர்கள் செயற்கையாக முன்னோர்களால் இடப்பட்டுள்ள செய்தி, இதுகாறும் இந்நூற் கட்டுரைகளில் விரிவாக விளக்கப் பட்டுள்ளமையை அறியலாம். இந்த மாற்றுப் பெயர்களில் ஒரு கண்ணோட்டம் செலுத்தினால், இத்தகைய முயற்சியில் உள்ள நிறைகுறைகள் புலப்படும். நிறைகள் உள்ள செயலில் குறைகளும் சில இருப்பது, மர இனப் பெயர் வைப்புக் கலைக்கும் விதிவிலக்கு அன்று; பொது விதியாகும். முதலில் இந்த முயற்சியில் உள்ள குறைகளையும் அடுத்து நிறைகளை யும் குறை அமைதிகளையும் முறையே காணலாம். குறைகளாவன: 2. குறைகள் 1. சில செயற்கைப் பெயர்களின் பொருள் தெளிவாகப் புரியவில்லை. எ.கா. தவசி - முதலியன. 2. சில பெயர்கள், பொருள் செய்வதில் ஐயப்பாடும் குழப்பமும் தருகின்றன. 3. சில பெயர்களின் பொருள் முற்றிலுமே புரிய வில்லை. 4. சில பெயர்களின் பொருளை ஒரு தோற்றமாக (நிதானமாக) உய்த்துணர வேண்டியுள்ளது. எ.கா : தங்கைச்சி, ஊருடைமுதலியார் - முதலியன.