பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 165 'பஞ்சியடர் அணிச்சம் நெருஞ்சியின்ற பழமாலென்று அஞ்சு மலரடிகள்...' (341) என்பது தேவரின் சீவகசிந்தாமணிப் பாடற் பகுதியாகும். இத்தகைய கூரிய நெருஞ்சி முள் தைப்பதால் யானைகளும் குதிரைகளும் முன்னேற முடிவதில்லை. இவ்வாறு யானை களையும் வணங்கச் செய்வதால் - பின்னிடச் செய்வதால் நெருஞ்சிக்கு யானை வணங்கி என்னும் பெயரும் சூட்டப் பட்டுள்ளது. இப்பெயரை, அகத்தியரின் ஏமதத்துவம் என்னும் பஞ்ச காவிய நிகண்டின் நான்காவது பாகமாகிய வைத்திய காண்டத்தின் 67ஆம் பாடலில் காணலாம். 'விட்ட யானை வணங்கி யென்றும் தொட்டப் பூடென்றும் . யானை நெருஞ்சியின் பேரே' என்பது பாடல் பகுதி. மத யானைகளை அங்கும் இங்கும் ஓடாமல் அடங்கச் செய்வதற்கும் இதைப் பயன்படுத்துவது உண்டு. தேட் கொடுக்கி என்னும் செடியும் முள்ளால் தைத்து யானையைத் துன்புறுத்துவதால், அதற்கும் 'யானை வணங்கி' என்னும் பெயர் அகரமுதலிகளில் தரப் பட்டுள்ளது. தரையில் நடப்பவர்களையும் காலில் தைத்துத் துன்பம் செய்வதால் நெருஞ்சிக்கு மர நூலார் (Botanists) Tribulus TerrestrisargārgøJüb@uuri gogu āSJ6r6T6WTfi.Tribulus என்பது இன்னலை - துன்பத்தைக் குறிக்கிறது. Terrestris என்பது தரைப் பகுதியைக் குறிக்கிறது. அஃதாவது, தரையில் நடப்பவர்க்கும் - நடப்பனவற்றிற்கும் இன்னல் விளைவிப்பது-என்பது பொருளாகும். மக்களை என்றென்ன..! யானைகளையே துன்புறுத்தும் நெருஞ்சிக்கு 'யானை வணங்கி' என்னும் பெயர் சாலப் பொருந்தும். இது சார்பினால் பெற்ற பெயராகும்.