பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 29 போலும் இருப்பினும், திருவள்ளுவரைச் சாதி சமயங்கட்கு அப்பாற்பட்டவராக மதிப்பிடுதலே எக் காலத்திற்கும் ஏற்புடைத் தாகு மன்றோ'-என்பது அடியேனது கருத்து விளக்கம். 1.10.2 பூமிசை கடந்தோன் பூமிசை நடந்தோன் என்னும் பெயர் அருகனுக்கு வந்த வரலாற்றை ஒரு சிறிது ஆராய வேண்டும். சமணம், புத்தம் என்னும் திருநெறிகள் (மதங்கள்) இரண்டும் இந்து மதம் என்னும் குட்டையில் ஊறின மட்டைகளே! அதாவது, இந்து மதத்திலிருந்தே இவை பிறந்தன. ஊழ்வினை-முற் பிறப்பு-பிற்பிறப்பு முதலியன மூன்றுக்கும் ஒத்திருத்தலைக் ტ5 fTვîðბffტ5 , 1.10.3 சமணம் பரப்பல் கிறித்துவம் பரப்ப இத்தாலியிலிருந்து தமிழ் நாட்டுக்கு பெஸ்கி (Beschi) என்னும் வீரமாமுனிவர். தமிழ்த் துறவியர் போலவேவந்த நடையுடை போக்கில் காணப்பட்டார். இந்து மக்களை யிழுக்க, அவர் மதத்தில் உள்ளன போன்ற சில - வற்றைச் செயற்கையாகத் தம் மதத்தில் செய்து காட்ட வேண்டும். எனவே, கிறித்துவத்திலும் தேர்த் திருவிழா புகுந்தது; டிசம்பர் 24 ஆம் நாள் இரவு தீபாவளி எனப் பட்டது; சனவரி 6 ஆம் நாள் பொங்கல் எனப்பட்டது. இவ்வாறே, சமணம் பரப்பியவர்களும், இந்து மதக் கடவுளரின் பெயர்களைத் தம் மதத்திலும் புகுத்திக் கொண்டனர். பவணந்தி என்னும் சமண முனிவர், தம் நன்னூலின் எழுத்ததிகாரக் காப்புச் செய்யுளில், "பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே'.