பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o சுந்தர. சண்முகனார் 31 மலரோன் - தாதவிழ் போதன் (பூமிசை நடந்தோன்) என்னும் பெயர்கள் உரியனவாகப் பல நிகண்டுகளில் கூறப் பட்டுள்ளன. - 1.10.4 அருகனும் புத்தனும் இந்த நிலையில், நான்முகன், திருமகள், கலைமகள் முதலிய இந்து சமயக் கடவுளர்க்கும் உரிய தாமரை மலரை அருகனுக்கு மட்டும் உரியதாகக் கூறமுடியாது. தாமரை அருகனுக்கும் உரியது என்ற அளவிலேயே கருத்து கொள்ள வேண்டும். அருகனுக்கு உரிய பெயரான பூமிசை நடந்தோன்' என்னும் பெயர் புத்தருக்கும் உரியதாக நிகண்டில் கூறப்பட்டுள்ளது. சான்று: திவாகர நிகண்டு: (1) அருகன் பெயர்: 'பொன்னெயில் நாதன், பூமிசை நடந்தோன், ... அருகற்கு இன்னும் அனந்தம் பெயரே" - (11) 2. புத்தன் பெயர்: . . . . . . . . . - - - போதிவேந்தன், சினன், வரன், புத்தன், ... வளர்ந்த பூமிசை நடந்தோன் ... இன்னவும் - பலவே' - (12) பூமிசை நடந்தோன் என்னும் பெயரேயன்றி, அண்ணல் - பகவன் - ஆதி - சினன் - வரன் - சாந்தன் - புண்ணியமூர்த்தி - சாந்தன் - புங்கவன் - முதல்வன் - புனிதன் - முதலிய பெயர்கள், அருகன், புத்தன் ஆகிய இருவர்க்கும் உரியன வாக நிகண்டுகள் கூறுகின்றன. மற்றும், சிவனுக்கும் அருகனுக்கும் உரியதாக அமலன் முதலிய பெயர்கள் கூறப் பட்டுள்ளன. திவாகரத்தில் சிவனுக்கு உரியதாகச் சொல்லப் பட்டுள்ள காம தகனன் என்னும் பெயரும், அருகனுக்கு உரியதாக அறிவிக்கப்பட்டுள்ள காமற் காய்ந்தோன் என்னும் பெயரும் பொருளால் ஒத்தன. புத்தன், விநாயகன் என்னும் பெயர்களும் அருகனுக்கு உரியனவாம். மற்றும்,