பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 33 தெரிசனம், நாம மின்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு - என்பன. மேலே, நான்கு வகையான எட்டுக் குணங்களைக் கண்டோம். 1949ஆம் ஆண்டிலேயே, அடியேனது திருக்குறள் உரையில், அடியேன் எண்குணம் பற்றி எழுதியுள்ள விளக்கம் வருமாறு: கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது ஏன்? திருவள்ளுவரே தெரிவித்துள்ளாரே! கோளில் பொறியின்' என்னும் இக்குறள் ஒன்பதாவது குறளாகும். இதற்குமுன் எட்டுக் குறள்களிலும் இறைவனை எட்டுக் குணங்கள் உடையவனாகக் கூறியுள்ளார். முறையே அவை வருமாறு: (1) உலகின் முதற்பொருளா யிருப்பவன் (ஆதிபகவன்), (2) வாலறிவன். (3) மலர்மிசை யேகினான், (4) வேண்டுதல் வேண்டாமை யிலான், (5) இறைவன் (இறைவன் என்றால், எங்கும் எல்லோருக்கும் தலைவனாய்த் தங்கியிருப்பவன் என்பது பொருள்), (6) பொறிவாயில் ஐந்தவித்தான், (7) தனக்கு உவமை யில்லாதவன், (8) அறவாழி யந்தணன் - என்பனவாம். இங்ஙனம் முதல் எட்டுக் குறள்களிலும் எட்டு இயல்புகளைச் சொல்லிக் கொண்டு வந்து, பின்பு ஒன்பதாவது குறளில் எண் குணத்தான் என்றால், முன் கூறிய எட்டுக் குணங்களை உடையவன் என்று பொருள் கூறுவதில் என்ன பிழை? பத்தாவது குறளில் புதிதாக ஒரு பெயரும் சொல்லவில்லை; ஐந்தாவது குறளில் கூறியுள்ள இறைவன் என்பதையே குறிப்பிட்டுள்ளார்.' என்பது அடியேனது விளக்கம். எனவே, குறிப்பிட்ட சில. பல பெயர்கள், குறிப்பிட்ட ஒரு கடவுளுக்கு மட்டுமே உரியன என்று கூற முடியாது.