பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மா தவம் புரிவாள் பொலி' என்பது, இறுதி அடியின் நச்சினார்க்கினியர் உரையாகும். துற்றிய நெற் குவியலுக்கு: 'குப்பை நெல்லின் முத்துாறு தந்த" (புறம்-24-22) நெற்குப்பை என்னும் ஒர் ஊர் தமிழகத்திலிருப்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. குப்பை என்னும் சொல்லே நெல்லைக் குறிப்பதற்கு:'வையும் துரும்பும் நீக்கிப் பைதறக் குடகாற் றெறிந்த குப்பை, வடபால் செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்' (பெரும்பாணாற்றுப்படை - 239-41) வைக்கோலும் தூசு துரும்புகளும் போகும்படியும் ஈரம் உலரும்படியும் மேற்காற்றில் தூற்றப்பட்ட நெல், வடக்கே யுள்ள பொன்மலை (மேரு) போல் தோன்றும் - என்பது கருத்து. 'களமலி குப்பை காப்பில வைகவும்' (புறம்-230-3) களத்தில் மிக்க நெற்குவியல் காவல் இன்றிக் கிடக்கவும்-என்பது கருத்து. இப்பாடல் பகுதிகளிலே, நெல்லின் குவியலை, நெல் என்னுஞ் சொல்லைக் காட்டாமலேயே. வெறுங் குப்பை' என்னும் சொல்லாலேயே சுட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குப்பையின் பதவி உயர்வைக் (Promotion) காட்டுகிற தன்றோ! வரகுக் குவியலுக்கு: 'சில்விளை வரகின் புல்லென் குப்பை (புறம்.327-2) ஆம்பல் குவியலுக்கு:- கல்லாடம் (மர்ரே) 'மரகதப் பன்னத்து ஆம்பலங் குப்பை' (56.28)