பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர. சண்முகனார் 63 குப்பைமேனிச் செடியிலுள்ள ஒவ்வொரு கணுவிலும் மூன்று காம்புகள் கிளைத்திருக்கும். அம்மூன்று காம்புகளுள் ஒன்று ஓரிலைக் காம்பு, இதில் ஒரே இலை மட்டுமே இருக்கும். இலையினும் காம்பு நீளமானது. இலையின் விளிம்பு இரம்பம் போன்ற பல்வெட்டு உடையது. இரண்டாங் காம்பில் இலைகள் கொத்து கொத்தாக உள்ளன. ஏறக் குறைய ஒவ்வொரு கொத்திலும் மும் மூன்று இலைகள் உள்ளன. இந்த இரண்டு காம்புகட்கும் இடையில் உள்ள சிறிது சிறிய காம்பில் பூக்கதிர் உள்ளது. குப்பைமேனிச் செடியில் உள்ள கணுக்கள் மாற்று ஒழுங்கில் உள்ளன. அடியில் ஒரு கணு வலக்கைப் பக்கம் இருக்கும்; அதற்கு மேலே ஒரு கணு இடக்கைப் பக்கம் இருக்கும்; அதற்கும் மேலே ஒரு கணு வலக்கைப் பக்கம் இருக்கும்; இவ்வாறு மாறி மாறி இருப்பதற்குத்தான் 'மாற்றொழுங்கு என்பது பெயராகும். இத்தகைய மாற்றொழுங்கு அழகினை ஆலம் இலைகளின் அமைப்பில் காணவேண்டுமே-கருத்தைக் கவரும் காட்சி யாகும் அது! எனவே, செடியின் ஒவ்வொரு கணுவிலும் மும் மூன்று காம்புகள் இருப்பதனாலும், இரண்டாங் காம்பிலுள்ள ஒவ்வொரு கொத்திலும் மும்மூன்று இலைகள் இருப்பத னாலும், இச்செடிக்கு மூன்றிலை மேனிச்செடி என்னும் பெயர் மிகவும் பொருந்தும். இச்செய்தி, பலகுப்பை மேனிச் செடிகளைக் கொண்டு வந்து நேரில் பார்த்து ஆய்ந்தறிந்து எழுதப்பட்ட தாகும். இது வடிவால் வந்த பெயர் வடிவால் வந்த மற்றுஞ் சில பெயர்களையும் பார்க்கலாம். 2-11 சக்கிர புட்பம்-புட்யி: சா. சி. பி. அகரமுதலியில் சக்கிர புட்பம் என்னும் பெயரும், மூலிகை வைத்திய அகராதியில் சக்கிர புட்பி என்னும் பெயரும் தரப்பட்டுள்ளன. பூக்கள், மலர்த்