பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மர் தவம் புரிவாள் தாளாகிய கிண்ணம் போன்ற விருந்தம் (Pedicel) என்னும் உலுப்பில் சக்கரம் போன்ற வட்ட வடிவில் தங்கியிருப்பதால் "சக்கிரபுட்பி என்னும் பெயர் தரப்பட்டது. 2-11-1 திருமேனிக் கடுக்கள்: ஜூபிலி தமிழ்ப்பேரகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும் இப்பெயர் முன் பெயரோடு தொடர்புடையது. கடுக்கன் என்பது காதில் அணியும் ஒர் அணிகலம். இக்காலத்தில் கடுக்கன் புதுப்புது மாதிரியாகச் செய்யப்படுகிறது. முன் பெல்லாம் வட்டமாகச் செய்வதே வழக்கம். குப்பை மேனியின் பூ சக்கரம்போல் வட்டமாயிருக்கும்; காதில் அணியும் கடுக்கன் போலவும் இருக்கும். பூக்களைப் பார்த்த பிறகு அணிகள் சில செய்யப்பட்டன. எனவே. கடுக்கன் போன்ற பூக்களை உடைமையால் குப்பை மேனிக்குத் திருமேனிக் கடுக்கன் என்னும் பெயர் பொருந்தும். 2-12 அரி மஞ்சரி: வைத்திய மலை யகராதியில் இது தரப்பட்டுள்ளது. அரி என்பதற்கு ஆழி (சக்கரம்) என்னும் பொருள் உண்டு, இதனைத் திவாகர நிகண்டில் உள்ள 'சிங்கம், திருமால், திகிரி, இரவி.அரியாகும் (11-237) என்னும் நூற்பாப் பகுதியால் அறியலாம். அரி என்பதற்குத் திகிரி (சக்கரம்) என்னும் பொருள் உண்டெனக் கூறுகிறது. மஞ்சரி என்பது பூ-பூங்கொத்து ஆகும். 'துணரே மஞ்சரி, பூங்கொத்தென்ப' (4-249) என்பது திவாகரம். எனவே, சக்கரம் போன்ற வட்ட மான பூங்கொத்தை உடைய காரணத்தால் 'அரி மஞ்சரி' என்னும் பெயர் ஏற்பட்டது எனலாம். சக்கிர புட்பி என்பது போன்றதே இது. இதற்கு இன்னொரு பெயர்க் காரணமும் கூறலாம்.