பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 65 அரி என்பதற்கு, பனங்கருக்கு, அரிவாள் என்ற பொருள் கள் உண்டு. அரிவாள் என்னும் பெயரே இதற்குச் சான்றாகும். அரிவாள், பனங்கருக்கு ஆகியவற்றின் விளிம்பு, அரம்போல், கூரிய பல்-பல்லாக இருக்கும். குப்பை மேனி இலையின் விளிம்பும் அரம்போன்ற பல்வெட்டு உடையது. வேப்பிலையும் இதேபோல் இருக்குமாதலின் அதற்கு 'அரவாய்' என்னும் பெயர் அளிக்கப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. மஞ்சரி என்பதற்கு இலைத்தளிர் என்னும் பொருள் உண்டு. இதனை, வல்லரி, குழை, முறி, மஞ்சரி, கிசலயம், பல்லவம், அலங்கல், கிளை, தளிர் ஆகும்' (4-112) என்னும் திவாகர நூற்பாவால் அறியலாம். எனவே, அரி போன்ற-அதாவது, அரம் போன்ற விளிம்புடைய இலைகளை உடைமையால் குப்பை மேனிக்கு 'அரிமஞ்சரி என்னும் பெயர் இடப்பட்டதாகவும் கூறலாம். மேற்கூறிய இருபெயர்க் காரணங்களுமே வடிவத்தோடு தொடர்புடையவை. 2-13 வாலப் பரிதி: பரிதி என்பதற்கு, வட்ட வடிவம், சக்கரம் என்னும் பொருள் உண்டு, வாலம் என்பது இளமையைக் குறிக்கும். எனவே, இளமையான (பசுமையான) வட்ட வடிவப் பூக்களை உடையது என்னும் காரணத்தால் வாலப் பரிதி' என்னும் பெயரை, சா.சி.பி. அகரமுதலி ஈந்துள்ளது போலும். 2-14 தனிவல்லி - பெருமாள்: சா.சி.பி. அகரமுதலி தனிவல்லி’ என்னும் பெயரையும், வைத்திய மலை யகராதி தனிவல்லிப் பெருமாள்' என்னும் பெயரையும் கொடுத்துள்ளன. வல்லி என்பது மருந்துச் செடி கொடிகளைக் குறிக்கும்.