பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 73 திருவாசகம்-கோயில் திருப்பதிகமும் (9) மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்' என அப்பர் தேவாரப் பாடல் பகுதியும் இவ்வாறு இன்ன பிற நூல்களும் சிவனைக் குறிப் பிடுகின்றன. எனவே சிவன் அக்கினிச் சிவம் எனவும் அக்கினிச்சலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அக்கினிச்சலம் என்பது நெருப்பின் வெப்பக் கடுமையாகும். வெப்பம் தரும் சாறு உடையது என்றும் கூறலாம். சரி, இப்பெயர்களைக் குப்பை மேனிச் செடிக்கு வைத்ததன் பொருத்தம் என்ன? 4-1-2-2 வெப்பப் பண்பு குப்பை மேனி உடம்புக்கு வெப்பம் தரக் கூடியது. முருகேச முதலியாரின் பொருட்பண்பு நூலில் குப்பை மேனியின் தன்மை (பண்பு) வெப்பம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. 4-1-2-3 குப்பைக் கீரை: குப்பையில் முளைக்கும் மற்றொரு கீரை குப்பைக் கீரை எனப்படும். இதற்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு. இந்தக் குப்பைக் கீரையும் மிகவும் வெப்பம் தருவ தாகும். இதுப்பற்றி, அகத்தியர் குண பாட நூலில். 'நீரைப் பெருக்கிவிடும் நீரு அனலைத் தானெழுப்பும் பாரநறுந் தங்கத்தைப் பற்பிக்கும்' எனக் கூறப்பட்டுள்ளது. கருத்து:- இது சிறு நீரைப் பெருக்கும்; உடம்புக்கு வெப்பத்தை உண்டாக்கும்; தங்கத்தைப் பற்பமாக்கும் - என்பதாம். 4.1-2-4 குப்பைவேளை: இப்படியொரு செடி உண்டு. வேளையும் மிகுந்த வெப்பம் தருவதே. இதுபற்றி அகத்தியர் குணபாடத்தில்,