பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மா தவம் புரிவாள் 'நல்லவே ளைப்பூண்டை நாடுங்கால் வாதமும்போம் சொல்லும் ஐயத்துடனே சோபையறும் - மெல்ல மெல்லத்தக்க அனலும் பித்தும் தானெழும்பும் சாந்தமின்றி அக்கரநோய் மிஞ்சும் அறி' இப்பாடலில் உள்ள அனலும் பித்தும் தான் எழும்பும்' என்னும் பகுதி கவனிக்கற் பாற்று, அனல் - வெப்பம். எனவே, குப்பையோடு தொடர்புடைய மூவகைச் செடிகளும் மிக்க வெப்பம் உடையவை என்பது போதரும். ஆகவே, இவற்றுள் ஒன்றானதும் தலைமையானது மாகிய குப்பை மேனி அக்கினிச்சலம், அக்கினிச் சிவம் என்னும் பெயர்களால் குறிப்பிடப்பட்டிருப்பது. சரியே இவை பண்பால் வந்தவை. 4.3 காலாக்கினி யானோன் காலாக்கினி யானோன், கால காலாக்கினி யானோன் என்னும் பெயர்கள் குப்பை மேனிக்கு சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ளன. காலாக்கினி யானோன் என்பது சிவன் பெயர். காலாக்கினி ருத்திரன் என்றும் கூறுவது உண்டு. உலகம் இறுதியில்-அதாவது, ஊழிக் காலத்தில் தீயால் சுட்டு அழிக்கப்படுமாம். அந்தத் தீ ஊழித்தீ எனப்படும். காலாக்கினி என்பதும் அதுவே. 4.3. 1. வடவை ஊழிக் காலத்தில் உலகை அழிக்கும் தீ, வடவை, வடவைத் தீ, வடவா முகாக்கினி (வடவா+முகம்+அக்கினி) என்னும் பெயர்களாலும் குறிப்பிடப்படும். வடவை என்றால் பெண் குதிரை, இத்தீ, பெண் குதிரையின் முக வடிவு கொண்டு கடலில் தங்கியிருந்து, இறுதிக் காலத்தில்