பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 75 பொங்கியெழுந்து உலகை அழிக்குமாம். கடலின் வடப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ என்று விளக்கம் கூறுவாரும் உளர். 4.3.2. வடவை வரலாறு பகன் என்பவன், தன் தந்தையைக் கொன்ற கிருத வீரியனது மரபை (வமிசத்தை) வேரொடு அழிக்கும் நோக்குடன் தவம் செய்கையில், அவன் முன்னோர் அத்தவத்தைத் தடுக்க, அவன் தவத்தை விட்டு, அந்தத்தவ நெருப்பைத் தன் முன்னோரது கட்டளைப்படி கடலில் விட்டானாம். அதுதான் வடவையாயிற்றாம். இது ஒரு வகை புராண வரலாறு. மற்றொன்று: ஞாயிறு மண்டலத்தைத் தேவர்கள் & fᎢó☾Ꭲ பிடித்தார்களாம். அப்போது தெறித்த தீப் பொறிகளை விச்வ கர்மன் என்பவன் சேர்த்துக் கடல் நீரை அடக்கக் கடலில் இட்டான். அதுதான் வடவை. இது, விரத சூடாமணி என்னும் நூலிலுள்ள வரலாறு. ஊழிக் காலத்தில் இந்தத் தீ பெருக, சிவனும் நெருப்பு வடிவாயிருந்து உலகை அழிப்பாராம். சிவன் அழித்தல் கடவுள் என்பது அறிந்ததே. இதனால் காலாக்கினி யானோன் என்னும் பெயர் ஏற்பட்டது. 4.4, காலகாலாக்கினி யானோன் காலத்துக்குக் காலனாய் (எமனாய்) இருக்கும் நெருப்பு கால காலாக்கினியாகும். அந்நெருப்பாயிருப்பதால் சிவன் கால காலாக்கினி எனப்பட்டார். இந்த வெப்பத் தொடர்பினால், அதாவது குப்பை மேனி மிகுந்த வெப்பத்தை உடம்புக்கு உண்டாக்குவதால்,