பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மாதவம் புரிவாள் யான் ஒரு முறை குப்பை மேனிக்கு உரியனவாகக் கூறப்பட்டுள்ள நாற்பத்திரண்டு பெயர்களை எழுதி என் மனைவியிடம் காட்டி, இவற்றுள் பூனை வணங்கிச் செடி - பூனைப் பகைச் செடி என்னும் பெயர்கள் உள்ளனவே - இது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன். எங்கள் வீட்டின் வெளிப்புறச் சுற்று மதிலுக்குள் குப்பை மேனிச் செடிகள் பல உள்ளன; பூனைகளும் சில உள்ளன; அதனால் என் மனைவியை வினவினேன். பூனைகள் குப்பை மேனிச் செடியின் மேல் விழுந்து புரண்டு விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். இலையை நாக்கினால் நக்குவதும் உண்டு - என்ற பதில் என் மனைவியினிட மிருந்து கிடைத்தது. இதை நான் பார்த்ததில்லை. குப்பை மேனிச் செடியின் மேல் பூனை விழுந்து புரளுவது மற்போர் புரிவதுபோல் தோற்றம் அளிப்பதால் பூனைப் பகைச் செடி என்றும், அச்செடியின் கீழ் விழுந்து புரளுவது அச்செடிக்கு வணங்குவதுபோல் தோன்றுதலால் பூனை வணங்கிச் செடி எனவும் வேடிக்கையாகப் பெயர் வைத்துள்ளனர் போலும். 6.3 Cat's Struggle இந்தக் கருத்துக்கு ஆங்கிலப் பெயரும் துணை செய் கிறது. ஆங்கிலத்தில் இதற்கு Cat's Struggle என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. முருகேச முதலியார், தம் பொருட்பண்பு நூலில், இந்த ஆங்கிலப் பெயருக்கு ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறு விளக்கம் வருமாறு; Note—The cat is supposed to be very fond of this plant, hence the meaning of the name Cat’s Struggle. (பூனை வணங்கி). இதனால், பூனைக்குக் குப்பை மேனிச் செடியின் மேல் விருப்பம் உண்டெனத் தெரிகிறது.