மூன்றையும் மிக வலிமையாக மக்கள் மனத்தில் பதியவைத்துள்ளார். அவருடைய அருமையான செய்யுட்களுக்கு - இவைதாம் ஆய்வுப் பொருட்களாக உள்ளன. எனவே, நாம் அந்த தமிழ்க் கவிஞரை ஒரு கிறித்துவன் என்றே அழைக்கலாம், என்று குறிப்பிட்டான், திரு டாக்டர் போப் அவர்கள் கிறித்துவத் திருமறைக் காவலராக இருந்ததினால் தான். May call என்ற வார்த்தையை ஆட்சி செய்துள்ளார். திருக்குறள் ஆய்வு மாநாட்டினர்களைப் போல, திருவள்ளுவரைக் கிறித்துவராக ஆக்கிட விரும்பவில்லை. காரணம், அவர் ஒரு மத எல்லையின் காவலராக இருந்ததால், தன்னை உயர்த்திக் கொண்டார். 'உலகப் பார்வையில் தமிழ் மறை என்ற தலைப் பில் இக்கட்டுரையை எழுதும்போது, சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டுச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்றால், இந்த மாநாட்டில் திருவள்ளுவர் கிறித்துவரல்லர் என்ற இந்த மாநாட்டின் முடிவை, சென்னை மாநாட்டார் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கு வெளியிட வழங்காமல், இரும்புத் திரையிட்டு மறைத்து விட்டார்கள். மலேசிய மண்ணில், பினாங்கு நகரில் 1932 - ஆம் ஆண்டு பிறந்த நான், மலேசியா நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டிலாவது அது வெளிவரட்டுமே, வந்தால், மாநாட்டிற்கு வருகை தரும் உலக அறிஞர் நினைவில் பதிவாகாதா? என்ற தமிழ்மறை வேட்கையால் சுருக்கமாக எழுதியுள்ளேன். வெளியிடுவது பற்றிய முடிவு தங்களது தொண்டு - விருப்பம். எனவே, திருவள்ளுவர் பெருமானுடைய பாதை - மக்கள் வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் தனி ஒரு பாதை - பொதுவான பாதை யாரையும், எவரையும் நல்வாழ்க்கைப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அறம் சார்ந்தப் பாதை நம்பி ஏற்கத் தகுந்த துணிந்த தமிழ்மறைப் பாதையாகும். அன்பன் என்.வரிகலைமணி
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/19
Appearance