புலவர் என்.வி ఉణాIుండా தனிச் சிந்தனையின் ஒப்பற்ற மூளையின் 'நியாயமான பணியை அறிவின் அடையாளம் என்கிறான் உலகம் போற்றும் கவிஞன் ஷெல்லி. பாற்பட்ட ஓர் 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்பது அய்யன் திருவள்ளுவரது பொய்யாமொழி அந்தத் தத்துவத் தோன்றல்கள் தோன்றிய திங்கள்தான் ஆண்டாண்டு தோறும் நமை நோக்கி நாடி வரும் செப்டம்பர் திங்கள் நினைவுகள்! திராவிடர் இனமெனும் சோலையிலே பூத்த ஞானப் பூக்களின் நறுமணமாய், தந்தை பெரியார் அவர்களே, அறிஞர் அண்ணா அவர்களே, கழக மேடைகளில் நீவிர் இருவரும் ஆற்றிய சமுதாயச் சீர்திருத்த அறிவிதழ் அறிவுரைகளை நாங்கள் நாள்தோறும் கேட்டுக் கேட்டுத் தான் புது மலராய்ப் பூத்து நாட்டில் மணம் பரப்பி வரும் தொண்டர்களானோம். புல் நுனியின் பனித்துளிகளாய் வைகறை ஒளியிலே மின்னி மின்னித் தங்களது அரசியல் எண்ணங்களை அன்றாடம் எமக்கு விளக்கி, அறிவித்த தந்தையே தமையரே ! சேரன் தம்பியின் சிலம்பு சங்க இலக்கியப் பாக்களின் செஞ்சொற்கள் , வள்ளற் பெருமானின் பாடல்களில் இன்சுவைகள் அத்தனையும் தங்களது அரும் நூற்களைக் கற்க கற்கப் பண்பூட்டி வளர்க்கும் தாய்ப்பாலாய் சுரந்துட்டுவதைச் சுவைத்துச் சுவைத்துப் பருகி அறிவு பெற்றவர்கள் நாங்கள்! தமிழர் வாழ்வை வேற்றினப் பகைகள் கருக்கும் காலங்களில் எல்லாம், கார்முகிலின் மின்னல்களெனக் கனல் தெறிக்கும் கண்டனங்களைக் கோடை இடிகள் போல இடித்து உங்களுடைய எச்சரிக்கை ஒலிகளை உமிழ்ந்து வந்த திராவிடர் இன இயற்கைச் சக்திகளே! தங்களது சக்திகள் பொழிந்த கனமழையின் தண்ணமுதப் புனல் தெளித்து வார்கடலின் அலை ஓசை நயங்களாகச் சொரிந்த நீர், வற்றாத சுனைகளாய் எம் இதயத்துள் இனமான உணர்வுகளை நாள்தோறும் வளமாய்ச் சுரப்பதற்கு ஊற்றுக் கண்களாக விளங்கி வரும் எமது முன்னேறுகளே ! அந்த ஊற்றுகள் அருவியாகி, ஆறுகளாகி வகை வகையான இன எழுச்சி நன்னெறிக் கொள்கைப் பயிர்களை உலகின் வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும் பொருளாதார மகிழ்ச்சிக்கும் உயிர்ப் பளித்து வந்த வேளாண் பிரிவுப் பெருங்குடி மக்களின் 20 - ஆம் நூற்றாண்டுத் திராவிடரியக்கத் தலைமை விவசாயிகளே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களே! பறவைகளின் 'நா இசைக்கும் இசைகளாய் எமைப் பாட வைத்து, பாய் புனலின் பேராற்றலே, அவற்றுள் பண்புச் சுவைகளாய்ப் புகுத்தி, ஊர்தோறும் திராவிடர் வரலாற்றைப் பாட வைத்துக் கொள்கைக் குயில்களாய்க் கூவ வைத்த தலைவர்களே! みぶ行z将・Aマ・A昇 கறவைகள் அருந்தும் நீரெலாம் அதன் மடியில் சுரக்கும் பாலமுதமாவதைப் போல, எமது தண்டு வட நரம்புகளின் நாடித் துடிப்புகளிலே அந்த மானப்பாலைப் பாயவிட்டு, 'கா' விலே விரவிடும் பூங்காற்றாய் எமை மக்களிடையே நடமாடிடப் பயிற்சி தந்த பகுத்தறிவுப் பாசறை பகலோனே! தந்தை பெரியாரே பண்புடைமையைப் போதிக்கும் நிலவோனே அறிஞர் அண்ணாவே! அந்த அற்புத கனலொளியால், புனலொளியால் எமது அகத்தை ஆண்டு - அடக்கி, நறுமணத்தை நாசியால் ஏற்றி, புதியனவாய் பூக்கும் பூவழகாய்ப் புதுப்புதுக் கழகத் தொண்டர்களைப் பூக்க வைத்துத் தன்மானமேற்றிப், 'பழையன கழிதலும் புதியன வழுவல புகுதலும் கால வகையினானே' என்ற தத்துவத்தை நிர்வகித்த தலைவரேறுகளே! ஒடத்திற்கும் தண்ணீருக்கும் சம்பந்தம் உண்டென்றாலும், ஒடம் தானே ஓட வேண்டும் தண்ணீர் மேல் ஒடத்துள் ஒடலாமா தண்ணீர் ? என்பதைக் கட்சிக் கட்டுப்பாட்டிற்கும், ஆட்சி நிர்வாகத்திற்கும், இலக்கண விளக்க அரிச்சுவடிகளை உலகுக்குக் கற்பித்த சிந்தனைச் சிற்பிகளே கழகத்துள் நீங்கள் உருவாக்கித் தந்த தோழமை உணர்வுகளை, 'தம்பி, எனும் குடும்பப் பாச உறவு முறைகளை எவ்வாறு மறப்போம் அண்ணா? உண்டோ உய்வு மறந்தால்? கோணல் மரத்தை நூல் கொண்டு நேர் செய்யலாம்; ஏன், கோணல் அறிவுரைகளையும் நூல் கொண்டு நேர் செய்யலாமே! ஆனால், தந்தையே தமையரே, நீவிரிரு வரும் சில நாணல் மனங்களை எவ்வாறு ஐயன்களே இயக்கக் குடும்பத்துள் நேர் செய்தீர்கள்? மனமாச்சர்ய ஆற்று வெள்ளத்தால் வேரொடு பெயர்ந்து விட்ட அந்தக் கட்சி நாணல்களை மீண்டும் கழக ஆற்றோரக் கரைகளிலே நட்டுப் பயிராக்கிக் காட்டினர்களே அதெப்படி தந்தையே ? எவ்வாறு அண்ணனே உங்களால் முடிந்தது? தேள் மட்டுமா கொட்டுகின்றது? தேனிக்களும் கொட்டவில்லையா? என்ற உடல்வலி உபாதைகள் தரத்தை உலகுக்கு உணர்த்திக் காட்டினிர்களே அதுதான். அகழ்வாரைத் தாங்கும் நிலமோ? ஓர் அரசியல் பெரும் பண்ணையாளராகத் திகழ்ந்து ஆட்சியெனும் முப்போக அறுவடையாளராக 1967 - ஆம் ஆண்டில் திகழ்ந்தார். இஃது ஒர் உலக அரசியல் அற்புதமன்றோ? அந்த அறுவடைக் களஞ்சியத்தைத் தந்தை பெரியாரின் தாளிலே கொண்டு போய் அறிஞர் அண்ணாவே காணிக்கையாக்கியபோது, தந்தை அதைக்கண்டு மெய் சிலிர்த்துப் பேரின்பம் பெற்ற நிலையில், நீரல்லவோ திராவிடரியக்கச் சான்றோன் என்று ஊரெலாம் அதைக் கூறிக் கூறிக் களித்தீரன்றோ தந்தையே இக் காட்சி எமக்ல்ெலாம் ஓர் இனமானப் போராட்டப் பெருமையாகக் 22 1-15 நவம்பர் 2006
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/20
Appearance