உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு களித்தோமே ஐயா ! எந்த உலக நாடுகளிலய்யா இந்த அரசியல், சமுதாயச் சம்பவம் நடந்தது?

  அறிஞர் அண்ணா அவர்களே ஒரு கட்சியின் கொள்கைகளில் பாலும் நீரூம் போல இரண்டறக் கலந்து விட்ட குடும்பப் பாசப் பிணைப்பு, நீர் தந்த தத்துவம் தானே! அதனாலன்றோ அண்ணா நீங்கள் பேசும் போதெல்லாம் எழுதும் போதெல்லாம், 'தம்பி உடையான் படைக்கஞ்சான்' என்று அடிக்கடி கூறிக் கூறி எமது குருதியிலே வண்ண மானிர் அவ்வுறவுக் கொடையையாம் எப்படியண்ணா மறப்போம்?
  வயிற்றிலே கோரோசனை உள்ள மாடு கலங்கின தண்ணீரைக் குடிக்காது. பிற மாடுகள் உண்ட பசும் புல்லையும் கூட அது உண்ணாது. இஃது சான்றோர் இயல்பல்லவா? என்பதை இனமான உணர்வுக்காக நீர் சுட்டிக் காட்டிய எடுத்துக் காட்டு தானே!
  கற்களிலே சில வகைகள் உண்டு. ஒரு கல் இல்லத்தை அழகூட்டிப் பொலிவுபடுத்தும் மறுகல் பள்ளம் மேடுகள் ஏறி இறங்கிடப் பயன்படும். இன்னுமொரு கல் மாமல்லபுரமாகும் திருச்சி மலைக் கோட்டையாகும்.
  பெண் ஒருத்திதான் அவள் தாயாகி, தமக்கையாகி, தங்கையாகி, தாரம் ஆனதைப் போன்றதே. கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் பதவிகளின் வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் என்பதைப் பன்முறை தம்பிக்கு மடல் எழுதி விளக்கம் தந்த அண்ணாவே, எப்படி அவற்றை அரசியல் வாதிகளால் மறக்க முடியும்? 'தம்பி என்று தலைப்பிட்டு திராவிட நாடு'

  காஞ்சி ஏடுகளில் எழுதும் போது கழகத் தம்பிகளுக்கு நீங்கள் அறிவு வள மூட்டிட வோர்ட்ஸ்வொர்த்தைப் போல நமது நாட்டின் இயற்கை வளங்களை இயம்பினீர்களே ! டென்னிசனைப் போலத் தாய்மொழியாம் தமிழுக்கு அடுக்கு மொழிக் கற்பனை வளங்களால் ஒரு மறுமலர்ச்சி தமிழ் நடையை உருவாக்கி மறு வாழ்வளித்ததை எப்படி மறப்போம்.
  விரக்திகள் உருவான போதெல்லாம் கவிஞன் ஷெல்லியைப் போல, எழுதி ஆறுதல் அளித்தீர்கள். கோல்டு ஸ்மித்தைப்போல நீங்கள் எழுதிய வரலாற்றுப் புரட்சி சம்பவங்களை எங்களால் மறக்க முடியவில்லையே. தங்களது சீர்திருத்த நாடகங்களில் பெர்னாட்ஷா, இப்சன், கான்பூர்த்தி போன்றவர்கள் நடமாடுகிறார்கள் என்று 'கல்கி பத்திரிகை ஆசிரியர் பாராட்டியதை நாட்டில் யாரே மறக்க, மறுக்க, மறைக்க வல்லாரண்ணா!
  கவிஞன் பைரனைப் போல நீங்கள் பேசிய தத்துவப் பேச்சுக்களைப் பைந்தமிழர் மறப்பரோ அண்ணா ! ('பாரதிக்குச் சளைத்தவரோ நீர் - மக்களிடம் நாட்டுப் பற்றை நாட்ட பாவேந்தருக்குப் பொற் கிழியும் சிலையும் அமைத்து அவருடைய கவிதைப் புரட்சியைச் சிவிகையில் ஏற்றி அழகு பார்த்தவர் தானே அண்ணா - நீங்கள்!
  திராவிடரியக்கத்தில் தோன்றிய தொண்டர்கள், தலைவர்கள் எல்லாம் பருவத்தோடு பொழிந்த தியாக மழைகள் அறிவுத் தென்றல்கள் : அன்பூட்டும் மண் வகை வளங்கள் : பண்புகள் சேகரித்த புதையல்கள் என்பதை அவரவர் செயற்கரிய செயல்களைச் செய்திட்ட உற்பத்திச் சாலைகளாக உழைத்தவர்களன்றோ தந்தை பெரியாரும் - நீங்களும் அவற்றை எல்லாம் இந்த செப்டெம்பர் திங்களில் பல முறைகளில் நினைவு கூர்கின்றோமே!
  தமிழ் உலகுக்குத் தாழம் பூக்கள் நீங்கள் உங்களின் இரு பக்கம் முட்கள் எங்களைத் திருத்திப் பக்குவப்படுத்தும் ஒழுக்க ஆசான்கள் அந்த அருமை பெருமைகள் எம் போன்ற தோழமைகளுக்குத் தானே புரியும் தெரியும் அதற்காகத் தானே ஆண்டாண்டுதோறும் நினைவூட்ட வருகிறது. செப்டெம்பர்!
  அருவியிலே ஓடும் தண்ணீரை அள்ளியள்ளிக் குடிக்க முடியுமென்றாலும், அதிலிருந்து பிரிந்து ஓடி வரும் வாய்க்கால்களில் தானே சுலபமாக முகந்து முகந்து பருக முடியும்? அதனைப்போல, அறிஞர் அண்ணா முதல்வர் கலைஞர் ஆட்சிச் சிறப்புகளை எல்லாம் மக்கள் அள்ளி யள்ளிக் குடித்துத் தேவை வேட்கைகளைத் தணித்துக் கொண்டு வருகிறார்கள் அய்யா!
  எந்த மலரின் மணமும் அந்தந்தப் பூவோடு அடங்கி விடுவதில்லை. அரும்பி மலர்ந்ததும் மணம் பரப்புவது இயல்புதானே. தமிழ்நாடு என்ற பெயர் 2000 ஆண்டுகளாக ஆட்சித் துறையில் இல்லை. திராவிடரியக்க ஆட்சியில் அல்லவா நமக்குப் பெருமை தேடித் தந்தார்.
  சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கித் தமிழ் வாழ்வுக்குச் சுய மரியாதை ஒளியூட்டிய பேராளா! கலைஞர் அவர்கள் இன்று இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும், ஏழை உழவனுக்கு 2 ஏக்கர் நிலமும் : விவசாயிகள் பெற்ற கடன் 8,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்து திராவிடரியக்க ஆட்சிக்கு நற்பெயரை மக்களிடம் உருவாக்கியதும் அண்ணா : தங்களது அரசியல் சுவடுகளால்தானே. இவை இனமானம் காக்கும் அரசுச்


அறிzஇAb\;. 23 1-15 நவம்பர் 2006