ஐம்புலன்களையும் அடக்கியவர்களில் மிகச் சிறந்தவரும், வான் புகழ் கொண்டவர்களில் மிக உயர்ந்தவருமான ஒரு சிரியோரே விசும்புளார் கோமான் என்று இந்திரன் குறிப்பிடப்படுகின்றார் - நாவலர் அவர்களால் இந்திறன் என்ற சொல், பிற்காலத்தில் 'இந்திரன் என்று திரிபுற்றதாக ஒரு வழக்கு உண்டு. எடுத்துக் காட்டாக, ஐந்திறம் என்பது ஐந்திரம் என்ற பாட வேறுபாடு அடைந்து உருக்குலைந்தது போன்று இந்திறன் என்பது இந்திரன் என்று உருக்குலைந்திருக்கிறது. பிற்கால ஏடுகளில், "பண்டித அ.கி. பரந்தாமனார் அவர்கள், "தொல் காப்பியர் கண்ட தமிழர் சமுதாயம்". என்ற நூலில் பக்கம் 1819ல் பழைய ஓலைச் சுவடிகளில் வல்லின ற கரத்திற்கும் இடையின ர கரத்திற்கும் வேறுபாடல் காண்டல் அரிது. இவ்வறியா நிலையில் 'ஐந்திறம் என்பது 'ஐந்திரம்' என எழுதப்பட்டிருக்கிறது. அதில் வியப்பு இல்லை என்று அ.கி.ப. குறிப்பிட்டுள்ளார். அது போல இந்திறன் என்ற சொல்லும் இந்திரன் ஆகி இருக்கக் கூடும். வடமொழியாளரின் கற்பனைப் புராணக் கதைப்படி ஐம்புலன்களையும் அடக்க மாட்டாமல், அகலிகையைப் புணர்ந்து கெளதம முனிவரால் சாபமிடப்பட்ட அரு வருப்பான தோற்றத்தைப் பெற்று உலாவிய இழிமகனான இந்திரனை இக்குறளோடு பொருந்திப் பொருள் கூறுவது எந்த வகையிலும் பொருந்தாது. 'ஐம்புலன்களையும் அடக்கிய ஆற்றல் மிகுந்த ஒருவரின் வலிமைக்கு அந்த இந்திரனை உவமையாகக் கொண்டு வள்ளுவப் பெருந்தகையார் கூறுவார் என்று எண்ணுவதற்குக் இடமில்லை எனவே, நாவலருரை, இந்திரன்' என்ற சொல், ஆராய்ச்சியில் மற்ற புராணப் பித்து உரையாளர்களை மலைச்சிகரம் போல் ஓங்கி, உயர்ந்து நின்று உறுதியாக மறுக்கின்றது. வித்யா ரத்தினம் டாக்டர் பி.எஸ் சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் திருக்குறள் அறத்துப் பாலுக்கு பாலுரை என்ற ஒர் உரை எழுதியுள்ளார். திருப்பனந்தாள் பூநீலபூரீ காசிவாசி சாமிநாத தம்பிரான் சுவாமிகளவர்களால் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் நினைவுத் தமிழ்ப்பரிசு என்ற பரிசைப் பெற்று உருவான நூல் அது. இந்திரன்' என்ற சொல்லுக்குச் சமம் ஆய்வு விளக்கத்தை எவ்வாறு வழங்கியுள்ளார் என்பதையும் படியுங்கள் இந்த உரையாசிரியர் பரிமேலழகர் இனம், இவர் நீத்தார் பெருமை, அதிகாரத்துள் பார்ப்பன வஞ்சக சித்து விளையாட்டுகளை ஆடியுள்ளார். என்ன அந்த ஆட்டங்கள். "நீத்தார் பெருமை அதிகாரத்தில் உள்ள 5வது குறளான 'ஐந்தவித்தான் என்ற குறள்பாவை 8-ஆவது குறட்பா உள்ள இடத்திலும், 8வது குறளாக வரும் நிறைமொழி மாந்தர் எனற குறளை 4வது இடத்திலும் மாற்றி வைத்து உரை எழுதியுள்ளார் 7வது குறட்பாவாக அதே அதிகாரத்தினுள் வரவேண்டிய "சுவை ஒளி ஊறு ஓசை" என்ற குறளை 5 ஆவது இடத்திலே மாற்றி வைத்து உரை கண்டுள்ளார் சாஸ்திரி அறிவுக்AA;. 20 திருக்குறள் பாடல் வரிசைப்படி வரவேண்டிய 9வது குறளான "குணமெனும் குன்றேறி நின்றார்” என்ற 'பா'வை, அதே அதிகாரத்தில் 7ஆவது குறளாக இடம் மாற்றி வைத்து உரை எழுதியுள்ளார் - அவர் . - - இவ்வாறு சாஸ்திரி திருக்குறள் 'பா'க்களை فاساله மாற்றி மாற்றி உரை எழுதியுள்ளதால் திருக்குறள் அதிகார வரிசைப்படி 5 ஆவது இடத்தில் வர வேண்டிய ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான், இந்திரனே சாலுங்கரி, என்ற குறள், சாஸ்திரியின் இடமாற்றம் எண்ணத்தின்படி அக்குறள். அதே அதிகாரத்தில் 8வது இடத்திலே இடம் பெற்றிருக்கிறது. - • - உரை எழுதிய சாஸ்திரி இடம் மாற்றி மாற்றி எழுதியதற்கு என்ன காரணம் என்றால் அது இதுதான். நீத்தார் பெருமைகளே பெருமை. அவற்றை எண்ண முடியாது. அவை உலகில் பிரகாசிக்கும் அப் பெருமையை அவர்களுடைய மந்திரம் காட்டும் அவர் சப்த ஸ்பர்ச - ரூப ரஸ் சந்தங்களின் வகைகயை அறிந்திருந்தால் அவராலே உலகம் நிலை க்கும் பிறரால் செய்ய முடியாதவற்றை அவர் செய்வார். அவருக்கு வரும் கோபத்தின் பயனை ஒரு நிமிஷமாயினும் தடுக்க முடியாது அதற்கு இந்திரனே சாகூஷி அவரையே அந்தணர் என்று கூறுவர். அவரே மோக்ஷத்திற்கு விதை என்று ஆசிரியர் (திருவள்ளுவர் கூறினார் என்கிறார் உரையாளர் சாஸ்திரி என்ற பார்ப்பனர் அதாவது பரிமேலழகரின் வாரிசு ! மேற்கண்ட காரணத்தைக் கூறும் உரையாளர் சாஸ்திரி, என்ன கூற வருகிறார் என்றால் அந்த இடத்திலே தான் திருக்குறளை ARYANIZATION ஆரிய இலக்கியமாக்கி இருக்கிறார். என்ன அந்த பார்ப்பனீயம் ! "இந்திரன் தான் திருவள்ளுவர் கூறும் அந்தணர் : அதற்கு அவருடைய செயலே சாட்சி அவர் ரஸ்ம் : ரூபம் : ஸ்பர்சம் சபதம் , கந்தம் இவற்றின் ப்ரக்ருதி , விக்ருதிளை அறிந்தவர் ; அவரே மோட்சத்திற்கு விதை என்ற காரணப் பழியை திருவள்ளுவரே கூறுகிறார் என்று திருவள்ளுவர் பெருமான் மீதே அப்பழியைச் சாஸ்திரி சுமத்துகின்றார். திருக்குறளில் கயமை என்று வரும் அதிகாரத்துள் 1076 ஆவது பாடல் ஒன்றுண்டு. "அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உயத்துரைக்க லான்" "தாம் தம் காதாற்கேட்ட மருமச் செய்திகளை கொண்டு சென்று பிறர்க்கெல்லாச் சொல்லுதலால், கீழ் மக்கள் விளம்பரஞ் செய்தற்குக் கொட்டப்படும் பேரிகையொப்பர் என்பரே அந்த 1076 ஆவது குறள். சிற்றுர்களில் கிராமச் செய்திகளை ஊர் தல்ையாரி மணியக்காரன் கூறும் தகவல்களை கழுத்தில் தொங்க விட்டு கொண்டிருக்கும் பறையில் அறைந்து தெருக்கள் தோறும் சொல்லிக் கொண்டே போவான். அந்தச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா ? கேட்கி றார்களா? என்ற அக்கரை அவனுக்குத் தேவையில்லை. ஏனய்யா சாஸ்தரி இவ்வாறு குறட்பாக்களை இடம் மாற்றி மாற்றி பொருளைப் புரட்டிப் புரட்டி எழுதினன் என்று கேட்டால், அதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா? θιά.έι-ηνό 20ο6
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/24
Appearance