பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையுண்மையை, இறை வலிமையை வற்புறுத்தினார். திருக்குறளில் கடவு ள் உண்மையை, வழிபாடுகளைத் திருவள்ளுவர் வலியுறுத்திக் கூறிய பிறகே, தமிழ் நூல்களில் கடவுள் வணக்கம் என்ற பாக்களைப் பிற்காலத்தில் சேர்த்து நூலுடன் எழுதப்பட்டன. உலக மக்களும், இந்தியாவில் வாழ்ந்த வேத கால மக்களும் "கடவுள் பலர்" என்று கூறி வந்தாள்கள். இந்திரன், சோமன், மித்திரன், வருணன் என்ற Polytheism கொள்கையைப் புகுத்தி வழிபாடு செய்து வந்தார்கள். திருவள்ளுவர், அந்த பல கடவுள் தத்துவத்தை மறுத்தார். “ஒன்றே தேவன், "இறை ஒருவனே' என்ற Monotheism கொள்கையை வெளியிட்டார். அந்த ஒரே இறை, "ஆதி - பகவன்" என்றார். அவரை முதலாக உடையதே உலகு" என்றார்.

  • கடவுள் உலகமாகப் பரவியுள்ளவர்ட்என்ற PANTHEISM தத்துவத்தைத் திருவள்ளுவர் கண்டித்தாள். "ஆதி - பகவன் முதற்றே உலகு" என்றார்.

w கடவுள் வேறு, உலகம் வேறு. கடவுள் உலகத்திற்கு நிமித்த காரணன் என்றும் திருவள்ளுவர் அறிவித்தாள். e என்றும் இருப்பது உலகம் - எவராலும் அது உருவாக்கப்பட்டது அன்று. அது தோன்றுவதும் இல்லை. அழிவதும் இல்லை"என்ற சமணர் கொள்கையை மறுத்தார். "உலகம் கடவுளை முதலாக உடையது. அதற்குத் தோற்றம், நிலை, இறுதி என்ற மூன்று தொழில்கள் உண்டு என்பதற்குச் சான்றாக, "உலகியற்றியான், ஆதி.பகவன் முதற்றே உலகு" என்றார். 'உயிர் என்ற ஒன்று இல்லை, எந்தப் பொருளுக்கும் ஆன்மா என்பது ஒன்றும் இல்லை என்று வாதிட்ட பெளத்தர், உலகாயதள் வாதங்களைத் திருவள்ளுவர் மறுத்தார். r 'மன்னுயிர்க்கு இன்னாமை தான்.அறிவான் என்கொலோ, "மன்னுயிர் ஒம்பி அருளாள்வர்', 'உடம்பொடு உயிரிடை நட்பு,"என்று தனது குறட்பாக்களில் திருவள்ளுவர் முழக்கமிட்டார். ஒரே ஒர் உயிர் தான் பல உடல்களிலும் இருந்து வருகின்றது" என்ற Monism கொள்கையைப் போதித்தவர்களைத் திருவள்ளுவர் மறுத்து, பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் என்ற குறளைத் திட்டினார். எனவே, பல்லுயிர் உண்டு என்பதற்குப் பற்றுக்கோடாக கடவுட் கொள்கையைச் சான்றாக்கினார்.

  • கடவுள் நிறை குணங்களின் உருவம். உயிர் இயல்பாகவே அறியாமை உடையது. அது முயன்று அறிவினைப் பெற்று உயரலாம் . என்பது திருவள்ளுவரது கோட்பாடு. அந்த முயற்சியில் ஈடுபடும்போது உருவாகும் வினைச் சார்புகளே வாழ்க்கை நிலைகள் என்றாம்.

இதற்குச் சான்றாக, கடவுள் வாழ்த்துப் பாவில், 'இருள்சேன் இருவினையும் சேரா என்றார். 'இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி - மாசறு காட்சி யவர்க்கு என்று 65-ஆம் குறளில் குறிப்பிடுகிறார்.