பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 88 எஞ்சியிருந்த எதிரிகள் படையையும் புறங்கண்டு, பவானி சங்கரனும் தஞ்சைத் தளபதியும் இராமநாதபுரக் கோட்டையை முற்றுகையிட்டனர்; சுருங்கை வழிசெய்து கோட்டையை விரைவில் பிடித்தனர். சேதுபதியும் அவரைச் சார்ந்தோரும் கொல்லப்பட்டனர். முடிவில் கடுமுயற்சிகளின் பலனாகப் பவானி சங்கரன் மீண்டும் சேதுபதி ஆனான். ஆனால், அவன் ஆட்சியில் அமைதி நிலைக்கவில்லை. தன் நாட்டில் செல்வாக்கு வாய்ந்த குறுநிலத் தலைவராகிய சசிவர்ணத்தேவர் என்ற பெருவீரரை அவன் பகைத்துக் கொண்டான், செல்வமும் செல்வாக்கும் மிக்க அவர் உடைமைகளை எல்லாம் பறிமுதல் செய்தான். சசிவர்ணத்தேவரோ, தஞ்சையில் சரண் புகுந்தார். அங்கே அவர் அரசவையில் வீரச் செயல்கள் பல புரிந்து தஞ்சை மன்னனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். வலிமை சான்ற மிகப்பெரிய வயப்புலி ஒன்றைத் தன்னந்தனியாகப் போரிட்டு வெற்றி கொண்டார் சசிவர்ணத் தேவர். தஞ்சை மன்னனைக் கொல்ல வஞ்சகர் சிலர் ஏவிவிட்ட காளையொன்றின் கொம்புகளைத் தக்க தருணத்தில் முறித்து எறிந்து, அரசரைக் காப்பாற்றினார். இத்தகைய ஒரு வீரரின் ஆண்மையிலும் ஆற்றலிலும் தஞ்சை வேந்தன் நெஞ்சைப் பறிகொடுத்ததில் வியப்பொன்றும் இல்லை யன்றோ? அடைக்கலமாய்ச் சென்ற இடத்தில் சசிவர்ணர் தம்மைப்போன்றே தமக்கு முன்பே தம் நாட்டார் ஒருவர் அங்கே அகதியாயிருப்பதைக் கண்டார். காலஞ் சென்ற விஜய இரகுநாத சேதுபதியின் அம்மானாரான' கட்டையத் தேவரே அவர். துன்பமும் துயரும் ஆத்திரமும் அவமானமும் அவ்விருவரையும் ஒருவராக்கின. எவ்வாறேனும் பவானி சங்கரனை நாட்டை விட்டு விரட்டி அடிப்பது என்று அவ்விருவரும் உறுதிபூண்டனர். தஞ்சை மன்னரைப் பொருளும் படையும் தந்து உதவி அருளுமாறு உள்ளுருகி வேண்டினர். தஞ்சை அரசனும் வழக்கமான வாக்குறுதியின்மேல் பாம்பாற்றிற்கு வடக்கேயுள்ள பகுதிகள் தனக்கே உரிமையர்க்கப்பட வேண்டும் என்ற உடன். படிக்கையின் மேல் - பணமும் படையும் தந்து, தன்னை நாடிவந்த மறவர் நாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க முன் வந்தான். ஏற்கெனவே பவானி சங்கரன் இத்தகைய ஓர் உடன்படிக்கையைச் செய்தும், அதை நிறைவேற்றாது துரோகம் புரிந்தானே என்ற எண்ணம் தஞ்சை மன்னனின் இதயத்தைத் துளைத்த வண்ணம் இருந்தது. எனவே, இராமநாதபுரத்தை ஒருவர் கையிலேயே ஒப்படைப்பதைவிடப் பலர் கையில் பகிர்ந்து தருவதன் மூலம் தன் கனவு நனவாகும் என்று கருதினான் தஞ்சை வேந்தன். காலமும் அவனுக்குக் கைகொடுத்தது. தஞ்சைத் தளபதி பெரும்படையுடன் சேதுபதிக்கு எதிராக அனுப்பப்பட்டான். தஞ்சைப் படைக்கும் சேதுபதி படைக்குமிடையே உறையூரில் பெரும்போர் நிகழ்ந்தது. அப்போரில் சேதுபதி படுதோல்வியடைந்ததுமின்றி, தஞ்சைத் தளபதியால் கைது செய்யப்பட்டுத் தஞ்சாவூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே மிகக்