பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(r 87 பேராசிரியர் ந.சஞ்சீவி சங்கரத்தேவன் என்ற தம் காதற் கிழத்தி மகனுக்கே அரசுரிமையை வழங்க முடிவு செய்தார். ஆயினும், தம் குடிமக்களின் வேண்டுதலால் தம் முடிவை மாற்றிக் கொண்டு விஜய இரகுநாதருக்கு முடிசூட்ட இசைந்தார். விஜய இரகுநாத சேதுபதியின் ஆட்சி 1711-ல் தொடங்கி, 1725 வரை நடைபெற்றது. விஜய இரகுநாதருக்கு ஆதரவாக மக்களின் முழு அன்பும் இருந்த போதிலும், பவானி சங்கரனால் விளைந்த தொல்லைகள் ஏராளம். பவானி சங்கரன் புதுக்கோட்டை மன்னனையும் தஞ்சை அரசனையும் தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டு சேதுபதி தங்கியிருந்த அறந்தாங்கிக் கோட்டையைத் தாக்கினான். ஆம் புதுக்கோட்டை மன்னனது பரம்பரை, தனக்குச் சோறும் சுகமும் கொடுத்த சீமைக்கே துரோகம் செய்வதைப் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கி விட்டது அறந்தாங்கிக் கோட்டையிலிருந்து போர் புரிந்து கொண்டிருந்த நிலையில் விஜய இரகுநாத சேதுபதி நோய்வாய்ப்பட்டு இராமநாதபுரம் எடுத்துச் செல்லப்பட்டார்; அங்கு 1720ல் 岛町Q沮0町Gös, மக்களின் ஒருமித்த அன்பிற்கு உரியவராய் விளங்கிய விஜய இரகுநாதரின் மீளாப் பிரிவால் மறவர் சீமை மீண்டும் உள்நாட்டுக் கலகத்திற்கு இரையாயிற்று. அதன் விளைவாக இராமநாதபுரச் சீமை பிளவுபட்டது. விஜய இரகுநாதர், தாம் இறப்பது நிச்சயம் எனத் தெரிந்ததும், கிழவன் சேதுபதியின் பேரரான தண்டத் தேவன் என்னும் சுந்தரேச இரகுநாத சேதுபதியை அரசராக நியமித்தார். ஆனால், பவானி சங்கரனோ வாளா இருப்பான்? அவன் பல்வகையாலும் முயன்று மக்களைப் பசப்பி அரசுரிமையைக் கைப்பற்றினான். அதனால், தண்டத்தேவனின் ஆண்மை சீறியது. மதுரை மன்னனின் துணையையும் புதுக்கோட்டை அரசனின் உதவியையும் தண்டத்தேவன் பெற்றான். புதுப்பலத்தோடு பவானி சங்கரன் தங்கியிருந்த அறந்தாங்கிக் கோட்டை தாக்கப்பட்டது. மாற்றாரின் பெரும்படையைக் கண்ட பவானி சங்கரன், தஞ்சை அரசனிடம் தஞ்சம் புகுந்தான்; தனக்கு உதவி புரிந்தால் பாம்பாற்றிற்கு வடக்கே உள்ள பகுதிகளை எல்லாம் தந்துவிடுவதாக வாக்களித்தான். இரண்டு மாதங்களில் பவானி சங்கரனும் தஞ்சைத் தளபதியும் இராமநாதபுரத்தின் மீது படையெடுத்தனர். தண்டத்தேவனுக்கும் பவானி சங்கரன் படைக்கும் இடையே போர் மூண்டது. இராமநாதபுரம் முற்றுகை இடப்பட்டது. புதுக்கோட்டைப் படைவீரரும் மதுரையிலிருந்து வந்த படைவீரரும் தண்டத்தேவனுக்குத் துணையாய் நின்றனர். ஆனால் தஞ்சைத் தளபதி எவ்விதப் பெருமுயற்சியுமின்றிப் புதுக்கோட்டைப் படையை முறியடித்து, தொண்டை மானின் இரு பிள்ளைகளையும் சிறைபிடித்தான். அதனால், புதுக்கோட்டை அரசன் சமாதான ஒப்பந்தத்திற்கு உடனே தயாராகிவிட்டான்.