பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 86 போரில் கொல்லப்பட்டார். சேதுபதியின் புகழ் தென்னாடெங்கும் பரவுவதாயிற்று. ஒரே வாரத்தில் மூவாயிரம் அல்லது நாலாயிரம் படை வீரர்களைத் திரட்டிப் போர்முனையில் நிறுத்தும் ஆற்றல் கிழவன் சேதுபதிக்கு இயற்கையாய் அமைந்திருந்தது எனில், அவர் செல்வாக்கிற்கும் இடையறா வெற்றிக்கும் வேறு விளக்கமும் வேண்டுமோ? இச்சிறப்புக் களின் துணையாலன்றோ 1702-ல் கிழவன் சேதுபதி தமக்கும் மதுரைக்குமிருந்த எல்லாத் தொடர்புகளையும் துணித்துக் கொண்டு தனியாட்சி நடத்தினார்? இது வாயிலாக நெடுங்காலம் மதுரை மாநகர் ஆட்சிக்கு பாண்டி நாட்டின் தலைநகரின் செல்வாக்கிற்கு அடங்கிக்கிடந்த சேதுநாடு சுதந்தர நாடாகியது. இப்பெருமையை மறவர் சீமைக்குத் தேடித்தந்த பெருமகனார் கிழவன் சேதுபதியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 1709-ல் வஞ்சம் தீர்க்கும் வகையில் தமது நாட்டின் மீது படையெடுத்து வந்த் தஞ்சை மன்னன் படைவீரர்களைப் பஞ்சாய்ப் பறக்கும்படி செய்ததோடு அவனுக்கு உரிய பலம் வாய்ந்த கோட்டையாகிய அறந்தாங்கியையும் கைப்பற்றினார் கிழவன் சேதுபதி. தம் வாழ்நாளின் முடிவிற்குள் தமிழக வரலாற்றில் சேதுநாட்டின் புகழ் மாற்றார் கண்களை எல்லாம் மருட்டும் வகையில் ஒளிர வேண்டும் என்று கிழவன் சேதுபதி கண்ட கனவு ஒரு சிறிதும் வீணாகவில்லை. சேது நாட்டைச் சுதந்தரபூமி ஆக்கிய பின்பே கிழவன் சேதுபதியின் கண்கள் மூடின. எண்ணற்ற வெற்றிகளைப் போர்க்களத்தில் கண்டு புகழ் வாய்ந்த கிழவன் சேதுபதி, 1710-ல் காலமானார். இவர் ஆட்சிக் காலத்திலேதான் மறவர் சீமையின் புகழ் குன்றின்மேலிட்ட விளக்காயிற்று. தம் ஆட்சிக் காலத்தில் கிழவன் சேதுபதி நாட்டுக்காகச் செய்த நன்மைகள் மிகப்பல. குளம் தொட்டு வளம் பெருக்கியும், கோயில்கள் கட்டியும், அறச்சாலைகள் அமைத்தும், அவற்றிற்கு எண்ணற்ற மானியங்கள் ஈந்தும் அழியாப் புகழ் கொண்டார் கிழவன் சேதுபதி. இராமநாதபுரத்தில் உள்ள முகவை ஊருணியும், கற்கோட்டையும், இராமலிங்க விலாச மாளிகையும் இவர் புகழைச் சரித்திர உணர்ச்சி உடையார்க்கு எடுத்தோதிய வண்ணம் இன்றும் நின்று நிலவுகின்றன. பதினெட்டு வருட ஆட்சிக்குப்பின் 1706-ல் மங்கம்மாள் மாண்டாள். அதற்குப்பின் மதுரை அரசுரிமை அவள் பேரராகிய விஜய இரகுநாத சொக்கநாதரைச் சேர்ந்தது. பரராஜ கேசரி கிழவன் சேதுபதியைப் போலத் திறமையையும், நிருவாக ஆற்றலையும், மக்களின் ஒருமித்த அன்பையும் பெற்ற ஓர் அரசரை இராமநாதபுர வரலாறு எக்காலத்திலும் கண்டதில்லை. முப்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதி, இறப்பதற்கு முன், பவானி