பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பேராசிரியர் ந.சஞ்சீவி தமிழர் - சிறப்பாகத் தஞ்சையைச் சேர்ந்த கள்ள மரபினர் இரவோடு இரவாய்த் திருச்சிராப் பள்ளியிலிருந்த முகம்மதியப்படைகளின் கூடாரங்களில் புகுந்து பழிவாங்கினர். கள்ளர்களின் வாளுக்கு நேரடியாகப் பதில் சொல்வது நைலாமுக்குக் கடினமாய் இருந்தது. ஆயினும், கடைசியாகப் பெரும்படையின் துணை கொண்டு கள்ளர் நாட்டைச் சூறையாடினான் நைஸ்ாம். எல்லாம் பாழாயின. சுதந்தர உள்ளம் படைத்த தமிழக மக்கள் இவ்வாறு நைஸாமின் கொடுமைக்கு இரையாகிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த காலத்தில், புதுக்கோட்டைத் தொண்டைமான் நைஸாமுடன் விருந்துண்டு காலத்தைக் கழித்தான்; நைசாமிடமிருந்து தன் வீரத்திற்கு விலையாக இலுப்பூரை இனாமாகப் பெற்றான். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை போல, நைசாமிடமிருந்து வாங்கிய இலுப்பூர் இனாத்தைப் பின்னாளில் வெள்ளையாட்சி வேரூன்றுவதற்குப் பெரும்பாடு பட்ட முகம்மதலிக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். என்னே அவன் வீரமும் வள்ளன்மையும்: 1745ல் மீண்டும் முராரி ராவின் தலைமையில் மராத்தியப் பெரும் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. இப்படையெடுப்பால் கன்னித் தமிழகத்திற்கு நேர்ந்த அழிவுகளைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது! இங்ங்னம் தமிழகத்தின் நிலை பல்வேறு படையெடுப்புகளாலும் பாழாகிச் சீர் குலைந்திருந்த காலத்திலேததான் பதினெட்டாம் நூற்றாண்டின் முதற்பாதி முடிந்து கொண்டிருந்தது. அந்நாளில் துரோகக் கும்பலாகிய ஆர்க்காட்டு நவாபுகளின் ஆட்சிப்பீடத்திற்கான உரிமைப் போராட்டம் தலை தூக்கி நின்றது. அந்நாளில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களாலேயே தெளிவாக அறிந்து கொள்ள முடியாத அளவிற்குச் சிக்கல் நிறைந்த சிலந்திக் கூடாய் உள்ளன. எனினும், நம் வரலாற்றிற்கு மட்டும் வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகளைச் சிறிதே கவனிப்போம்: பதினெட்டாம் நூற்றாண்டின் முதற்பாதி முடிவதற்குள்ளேயே இந்திய மண்ணிலே ஐரோப்பிய வணிகர்கள் கால்வைத்து விட்டார்கள். பண்டகசாலைகளை அமைத்து வியாபார வேட்டைக்காக வந்த வெள்ளை வியாபாரிகள் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் அரசியல் வேட்டையாடவும் தொடங்கினார்கள். வியாபாரப் போட்டியிலும் அரசியல் சூழ்ச்சியிலும் தலைமை தாங்கியவர்கள் பிரெஞ்சியரும் ஆங்கிலேயரும் ஆவர். தமிழ் நாட்டு மக்களின் சுதந்தரத்தை வேட்டையாடக் கறுவிக் கொண்டிருந்த அவர்களுக்கு ஆர்க்காட்டு நவாபுகள் மோப்பம் பிடித்துக் கொடுப்பதில் குறைவில்லாத உதவி புரிந்தார்கள். மராத்தியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு தன் அரசையுமுயிரையும் காப்பாற்றிக் கொண்ட ஆர்க்காட்டு நவாபு சாப்தர்