பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 பேராசிரியர் ந.சஞ்சீவி புறப்பட்ட கர்னல் புல்லர்ட்டன் படையெடுப்பாக வடிவெடுத்தது. மருது பாண்டியர்கள் ஒழுங்காகக் கப்பம் கட்டவில்லை; அண்டை நாடுகளில் புகுந்து கொள்ளை அடிக்கின்றார்கள், என்று புகார் கூறிக் கொண்டு பாய்ந்து வந்த புல்லர்ட்டனுக்குப் புதுக்கோட்டைத் தொண்டைமான் இம்முறையும் வரிந்து கட்டிக்கொண்டு உதவி புரிந்தான். அதுவும் எத்தகைய உதவி? சிவகங்கையையும் தென்பாண்டி நாட்டையும் அடக்கி அழிக்க ஆவணம் கொண்டு வந்த வெள்ளைப் படைக்கு ஐயாயிரம் கலம் நெல்லையும் படையையும் கோட்டய்யா ஆச்சாரி என்ற வஞ்சகத் தளபதியையும் தந்து உதவினான். 1783-ஆம் ஆண்டு மேலுரை நோக்கி விரைந்த கர்னல் புல்லர்ட்டன் அங்கு வலிமை வாய்ந்த ஒரு படையை வைத்துவிட்டு, அங்கிருந்து கிழக்கே இருபது மைல் துரத்தில் உள்ள சிவகங்கைக்குச் சாடினான். ஜோசப்பு ஸ்மித்தின் படையெடுப்புக்களால் கண்ட அழிவு போதாது என்று. கடந்த பதினோர் ஆண்டுகளாகக் களவுக்கும் கொள்ளைக்கும் நவாபுவின் திறமையற்ற நிருவாகத்திற்கும் இரையாகி நலிவுற்றுக் கிடந்த சிவகங்கைச் சீமையை மீண்டும் ஒரு கடும்போரில் ஆழ்த்தக் கருணை உள்ளமும் நுட்பமான அரசியல் அறிவும் படைத்த மருது சகோதரர்கள் ஒரு சிறிதும் விரும்பவில்லை. எனவே, தாங்கள் பாடு பட்டுத் திரட்டிய செல்வத்திலிருந்து நாற்பதாயிரத்தை எண்ணி எண்ணிக் கொடுத்தார்கள் கும்பினியார்க்கு மருது சகோதரர்கள்; எஞ்சிய ஐயாயிரத்தைப் பின்னர் தருகிறோம்,' என்று, கூறி, அதற்குத் தக்க ஈடுகளும் காட்டினார்கள்." காசைக் கண்ட கும்பினிப்படை கும்மாளம் இட்டுக் கொண்டு திரும்பியது. வேலு நாச்சி, சீமை தப்பியதே' என்று எண்ணி மனங்குளிர்ந்தாள். சீமை மக்கள், சரி; நம்மீது மருதுபாண்டியர் வைத்த கருணை இது தொலைந்து போகட்டும் கும்பினியான் இன்னொரு முறை தலை காட்டினால் நொறுக்கி அனுப்ப வேண்டுவதுதான்' என்று பொருமிக் கொண்டே தங்கள் மனத்தை ஆற்றிக் கொண்டார்கள். ஒருவாறு ஆர்க்காட்டு நவாபுவின் பிடுங்கலிலிருந்தும் வெள்ளைக் கம்பெனியின் பீரங்கிகளிடமிருந்தும் சீமையைக் காப்பாற்றிய பின் சிவகங்கையின் புகழைத் தரணியெல்லாம் போற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த தாக்குவதற்கான ஆக்க வேலைகளில் இரவு பகலாய் ஈடுபட்டார்கள் மருது சகோதரர்கள். மருது சகோதரர்கள் செய்த ஆக்க வேலைகளுள் எல்லாம் தலை சிறந்தது அவர்கள் ஆற்றிய கோயில் திருப்பணியே. இறை பணி 1. காளையார் கோவிலில் தெய்வ பத்தியையும் தேச பத்தியையும் இரு கண்களெனப் போற்றிய பெருமக்கள் மருது சகோதரர்கள். தினம் சிவ