பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 124 சர்க்கரை இராமசாமிப் புலவர் அவர்களது உரைநடை வாயிலாக உணர்வதே பொருத்தம் உடையதாகும் இணையில்லா இன்பம் தருவதுமாகும்: இவர் (சாந்துப்புலவர்), பாண்டி வள நாட்டில் தேவாரம் பெற்ற தலங்களுள் திருப்புனவாயிலுக்கு மேற்கில் மூன்று கடிகைத் துரத்திலுள்ள சிறுகம்பை பூரிலிருந்த வேளாளகுல திலகரும், இராமநாதபுரஞ் சம்ஸ்தான வித்துவ சிகாமணியாய் விளங்கியவருமாகிய சர்க்கரைப் புலவருடைய குமாரராவர். இவர் தம்பிமார் சீனிச் சர்க்கரைப் புலவர், சீனிப்புலவர், முத்து முருகப் புலவர் என்பவர் என்ப. ‘இவர் இளமை முதல் தமது பிதாவினிடத்தில் இலக்கணவிலக்கியங்களை ஐயந்திரிபறக் கற்று வருங்காலத்தில், கி.பி.1780-ஆம் வருஷம் முதல் 1801 ஆம் வருஷம் வரையில் சிவகங்கையை ஆண்டு வந்த பெருங் கொடையாளரும், இம்மைப்பயன் கருதாது மறுமைப் பயனையே கருதிய வள்ளலும், தம்மையொழியத் தமவெனச் சார்ந்தவைகளையெல்லாம் அக்காலத்துத் தமிழகத்திலுள்ள புலவர் பலர்க்குமுதவி, அன்னோரை ஒருங்கு கூட்டி, அன்னோருடன் போது போக்குதலையே பெரும்பயனாகக் கொண்ட அருங்கலை விநோதரும், அநேக தேவாலய பிரமாலய அன்ன சத்திரங்கட்குப் பல கிராமங்களை முற்றுட்டாகவளித்த தர்மப்பிரபுவும், ஐதரலியின் உதவியைக் கொண்டு நவாபுவின் படைகளை முறியடித்து வெற்றி மாலை கொண்ட ரணசூரருமாகிய மருது பாண்டியரென்பவர் சேது மார்க்கத்திலுள்ள கலிய நகரியில் அன்னசத்திரங்கட்டுவித்தற்கு வந்திருந்ததைக் கேள்வியுற்ற சர்க்கரைப் புலவர், அந்த மருது பூபதியைப் பார்த்து வரவிரும்பி அட்டநாகபந்தம் என்னுஞ் சித்திர கவியொன்றெழுதி வைத்துவிட்டுத் தாம் சிவபூசை செய்யச் செல்வாராயினர். அச்சமயத்தில் ஆண்டினிளையராயினும் அறிவின் முதியவராகிய சாந்துப்புலவர், தம் தகப்பனார் எழுதிவைத்திருந்த அட்டநாகபந்தத்தைப் பார்த்துத் தாமும் அதனுள் அட்டநாகங்களைச் சிறிய வடிவாய் வரைந்து, ஒரு செய்யுளையுமெழுதி, முன்னிருந்த இடத்தில் வைத்துப் போய்விட்டனர். 'பூசை முடித்துப் போஜனஞ் செய்து வந்த புலவர், தம் பரிசனங்களுடன் சிவிகையூர்ந்து கலியநகரிக்குச் செல்ல, கவிராசர் வரவு கேட்ட புவிராசராகிய மருது புலவர் தம் ஞாபகத்திலிருந்த அட்டநாகபந்தச் செய்யுளைச் சொல்லிப் பொருள் கூறிப்பின் அக்கவி வரைந்த ஏட்டை அரசரிடங்கொடுக்க, ஏற்ற அரசர் படித்துப் பார்த்துப் பெருமகிழ்வுற்று, 'கவியரசரே, நீங்கள் எழுதிய அட்டநாகங்களுங் குட்டி போட்டுளவே என்னை? என மதியூகத்தாலறிந்த புலவர் குழந்தையைக் கேட்க வேண்டும்' என்று மறுமொழி கூறக்கேட்ட அரசர், 'அக்குழந்தை எங்குளது? யாருடையது? என வினவியறிந்து, அக்குழந்தையைப் பார்க்க