பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 பேராசிரியர் ந.சஞ்சீவி வாழ்க்கையில் திளைத்தவர் மருதரசர் எனினும், இரு மனப்பெண்டிர்க்கு அவர் இதயத்தில் இடம் சிறிதும் இருந்ததில்லை. எந்நாளும் ஒழுக்கத்தைச் சிறந்த உறுதிப் பொருளாகப் போற்றிய அப்பெருமகனாரின்-வேறெதற்கும் அஞ்சாவிடினும் தெய்வத்தின் ஆணைக்கு அஞ்சும் சீலரின் - நல்வாழ்வை நயம் நிறைந்த மொழிகளால் போற்றுகிறார் ஒரு புலவர்: 'பரனா ரியல்புணரும் பண்பன்ற னின்பம் பரநா ரியரறியாப் பண்பன் - றிரனார் அணிமருது பாண்டில்விழ வன்றுதைத்தோன் யாரும் பணிமருது பாண்டியபூ பன்." ஒழுக்க வாழ்வில் சிறந்த மருது பாண்டியர் உள்ளம் பாடிவந்த புலவரின் பாட்டோசை கேட்டால், பணிபோல உருகும்; ஆசை தீர வாரி வழங்கினால் அன்றி அவரது கலையுள்ளம் - கருணையுள்ளம் - ஆறுதல் கொள்ளாது. இவ்வுண்மையைப் பலகாலும் அனுபவித்து உணர்ந்தார் தமிழ்க் கவிஞர் திக்கெட்டும் தீரர் மருதுவின் கொடைப் பெருமை பரவியிருக்கும் பான்மையை உணர்ந்தார். அவரை அறியாமல் அவர் மனம் கற்பனை செய்தது. கவிஞரின் கற்பனைக்குக் கன்னித் தமிழும் உதவியது. அருமையான பாடல் தமிழ் மொழிக்குக் கிடைத்தது. அப்பாடல் இதுதான். தேனுந்து தாமன் மருதேந்த்ர ராசன் தியாகங்கண்டு வானும்பர் தாமும் புலவரென் றார்.வடிவேற்குகனென் போனும் புலவனென் றான்புதன் றானும் புலவனென்றான் நானுங் கவியென்றி சுக்கிரன் றணு நவின்றனனே." விண்ணாளும் தேவர் எல்லோரும் மண்ணாளும் மருது பாண்டியர் பால் வந்து, பண்ணாளும் கவிஞர் நாங்கள், பண்ணாளும் கவிஞர் நாங்கள் என்று கூறிக் கொண்டனராம் மருதரசர் கையால் பரிசில் பெறக் கொண்ட காதலால். என்னே புலவரின் கற்பனை மருதரசரின் கொடைத்திறன் இயற்றமிழ்ப் புலவர் பாடல்களால் பெரும்புகழ் கொண்ட மருதிருவரை மதுரகவி என்னும் இசைத் தமிழ்வல்ல புலவரேறும் அரிய பெரிய இசைப் பதங்களால் போற்றிப் பெருமை செய்துள்ளார் என்று கூறுவர் சேது நாடும் தமிழும் என்ற சிறந்த நூலின் ஆசிரியர் திரு.ரா. ராகவையங்கார். இவ்வாறு புலவர் பெருமக்கள்" பாடிய பாடல்களால் மட்டும் அன்றிப் பாமர மக்களின் நாவில் நடமாடிய நாட்டுப் பாடல்களிலும் மருதரசர் புகழ் மங்காக் காவியமாய் வாழ்கிறது. சான்றாக, 'எட்டுத் திசைகட்கும் ஆக்கினா சக்கிரம் ஒன்றாய்ச் செலுத்தும் ரணசூரன்