பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 பேராசிரியர் ந.சஞ்சீவி ஆதாரங்கள் சிலவற்றிலிருந்து சிவகங்கைக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் கடிதத் தொடர்பு இருந்தது லூவிங்டனுக்கே தெரியும் என்பது புலனாகிறது." ஆனால், பாஞ்சைப்போர் முடியும் வரையில் மருது பாண்டியர்களிடம் இது பற்றி லூவிங்டன் எதுவும் கண்டு கொள்ளவில்லை. ஒரு சமயத்தில் ஒரு பாளையக்காரரோடு போர் நடத்துவதே அறிவுடைமை என்று அவன் கருதினான்' இது கால்டுவெல்லின் தெளிவான ஆராய்ச்சி. திருநெல்வேலி வரலாற்று ஆசிரியர் கூறும் இவ்வுண்மையோடு செவிவழிச் செய்தியாக வழங்கி வரும் கருத்தொன்றும் இங்கே நாம் கவனித்தற்கு உரியது. ஆந்திர நாட்டினின்றும் பஞ்சப்பேய்க்கும் மகம்மதியரின் மதமாற்றக் கொடுமைக்கும் அஞ்சித் தென்பாண்டிச் சீமையில் பாஞ்சைப்பதிக்குக் குடியேறிக் குடிசைகளில் வாழ்ந்த கம்பளத்து நாயக்கர் கூட்டத்தை அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த ஜெகவீரபாண்டியன் கண்டான், புதியவர்களாய் வந்து குடியேறிய அவர்களை அணுகி, உங்கட்கு என்ன வேண்டும்?' என்று கேட்டான். அவர்கள், எங்கட்கு வேறொன்றும் வேண்டா நாயை முயல் துரத்திய இடம் அதோ இருக்கிறது. அந்த இடத்தை எங்களுக்கு இனாமாக வழங்கவேண்டும், என்றார்கள். மன்னவனும் இசைந்தான். ஒருநாள் கம்பளத்து நாயக்கர்கள் தங்கள் குலதெய்வத்திற்குப் பூசை போட்டுக் கொண்டிருந்த போது ஒரு முதியோள் மீது மருள் வந்ததது. தெய்வமுற்ற அம்மூதாட்டி, அரசர் கொடுத்த இடத்தில் கோட்டை ஒன்று கட்டுங்கள். உங்கட்கு யோகம் பிறக்கும், என்றான். தாயே நாங்கள் ஏழைகளாயிற்றே! என்றனர் கூடியிருந்த கம்பளத்தார். கவலை வேண்டா. அடுத்துள்ள சிவகங்கைச் சீமையை நண்ணுங்கள். அந்நாட்டை ஆளும் மருது பாண்டியர்கள் உங்கள் ஆவலை நிறைவேற்றுவார்கள்,' என்றாள் மருளுற்ற மங்கை. அரசரிடம் ஆண்டிகள் எவ்வாறு செல்வது? என்று மீண்டும் குறையிரந்தார்கள் நாயக்கர்கள். 'அஞ்ச வேண்டா. சிவகங்கையை ஆளும் மருதரசருக்குச் சேவற்சண்டை" என்றால் உயிர். அதற்காகச் சேவல்களை வளர்ப்பதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எனவே, அச்சேவல்கட்குக் கம்புத் தானியத்தை வண்டிகளில் பொதிகளாய் ஏற்றிக் கொண்டு அவரிடம் செல்லுங்கள். அவர் உங்களை இன்முகத்தோடு வரவேற்று ஆவன செய்வார்,' என்றாள் அந்த அரிவை. அவள் வாக்குப் பலித்தது. கம்பளத்தார்க்கு யோகம் பிறந்தது. பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டை மருதரசர் ஆதரவால் கண்டவர் மயங்கும் வண்ணம் எழுந்தது. அக்கோட்டைக்குத் தச்சுச்' செய்யக் கம்பளத்தாரின் அழைப்பை ஏற்றுச் சென்றாராம் மருதரசர். அப்போது கம்பளத்தார் அன்பில் சிக்கிய அவர், 'உங்கட்குத் துன்பம் உற்ற வேளை எனக்குத் தெரிவியுங்கள். நான் உங்களைக் காப்பாற்றுவேன்' என்று உறுதி மொழி கொடுத்தாராம். அதை