பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 148 அத்தனை தோணிகளையும் பிடித்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டனர் மருதுபாண்டியர். அவ்வளவுதான் வங்காளக் குடாக் கடலில் மருதுபாண்டியர் நாட்டைச் சேர்ந்த தோணிகள் கணக்கின்றி மிதந்தன. விடுதலை வேள்வியில் ஈடுபட்டு இருக்கும் சுதந்தர வீரர்களைப் பட்டினியின்றிப் பாதுகாக்கவே மருதுபாண்டியர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்தது கம்பெனி அரசாங்கம்; ஆத்திரம் கொண்டது. கலெக்டர் லூவிங்டன் உறுமினான். பாம்பனில் அப்போது படைத் தலைவனாய் இருந்த வெள்ளைத்துரைக்கு வெறி பிடித்தது. சிவகங்கைச் சீமையைச் சேர்ந்தனவாய்க் கடலில் மிதந்த கணக்கற்ற தோணிகளில் பல பிடிக்கப்பட்டன. நாசமாக்கப்பட்டன, தீ வைத்துச் சாம்பலாக்கப்பட்டன. இவ்வாறு வெள்ளை அரசாங்கம் எடுத்துக் கொண்ட கடுமையான நடவடிக்கைகட்குக் காரணம் சிவகங்கைச் சீமையைப் பட்டினிக்கு இரையாக்குவது மட்டுமன்று சுதந்தர வீரர்கள் கடல் வழியாக எங்காவது தப்பிச் சென்றுவிடுவார்களோ என்ற பயமுந்தான் என்று அறிஞர் கால்டுவெல் தம் திருநெல்வேலி வரலாற்றில் கூறுகிறார். இனிச் சிறுவயலைப் பிடித்த வெள்ளைப்பட்டாளம் காளையார் கோவிலைட் பிடிப்பதற்காக மேற்கொண்ட கடுமுயற்சிகளைப் பற்றிக் கவனிப்போம். சிறுவயலையும் காளையார் கோவிலையும் இணைக்கும் காடு பெருங்காடு. கருநாடகம் முழுவதிலும் அதைப் போன்ற அடர்ந்த காடு இல்லை. அம்பும் நுழைய முடியாத அக்காட்டைக் கிழித்துச் சாலை அமைத்து அது வழியாக முன்னேறிக் காளையார் கோவிலைப் பிடிக்க வேண்டும் என்பது பறங்கியர் திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியை வெள்ளைப்பட்டாளம் ஜூலை மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. பற்ங்கியரின் முயற்சிக்குத் துணையாய்த் தொண்டைமான் அனுப்பிய கூலிப்பட்டாளம் இருந்தது. வழி காட்டுவதற்கும் மரம் வெட்டுவதற்கும் தொண்டைமான் சீமையிலிருந்து வந்த ஈராயிரவர் ஆடவர்களோடு இருநூறு வெள்ளையரும் மலாய் நாட்டுத் துப்பாக்கி வீரர்களும் காட்டை அழிக்கும் கடுமுயற்சியில் ஈடுபட்டார்கள் ஏழுமணி நேரம் பாடு பட்டு ஒன்றரை மைல் துரம் வழி கண்டார்கள். ஆகஸ்டு முதல் தேதி மேஜர் ஷெப்பர்டு காளையார் கேர்யில் காட்டுக்குள் அமைந்த ஒரு சிறு கிராமத்திற்குள் படையுடன் நுழைந்தான். அங்கே தயாராய் இருந்த மருதுவின் படைக்கும் வெள்ளைப் பட்டாளத்திற்குமிடையே போர் மூண்டது. அதிக சேதம் ஏதும் இன்றி வெள்ளை மேஜர் தன் முகாமிற்கு வந்து சேர்ந்தான். பாதை அமைக்கும் படையும் முக்கால் மைல் அளவிற்குக் காட்டில் பாதை கண்டது.