பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 பேராசிரியர் ந.சஞ்சீவி கொடுத்தாராம். அன்று முதல் வெள்ளோலை வாசித்த வித்தகரின் புகழும் இறவா வரம் பெற்றது. 3. கர்த்தரின் சீடர் கருணை புரிந்தார்: காளையார் கோவிலிலிருந்து சிவகங்கைக்கும் தொண்டிக்கும் செல்லும் பாதையில் சருகணி என்னும் அழகான ஊர் ஒன்று இருக்கின்றது. அவ்வூரைப் பழம்பெருமை சான்ற மாதாகோவில் ஒன்றும் அணி செய்கிறது. அக்கிறிஸ்தவ சமயக்கோவிலையும் நம் மருதரசரையும் பிணைத்து வழங்கி வரும் ஒரு வரலாறு மிக்க சுவையுடையது: வெள்ளையரோடு கடும்போர் நடந்து கொண்டிருந்த காலம் - ஒரு நாள் மாலை நேரம் - இருள் எங்கும் சூழ்ந்து கொண்டிருந்த வேளை - டக், டக் டக் என்ற சத்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. சருகணி மாதா கோவிலின் தலைவர் சர்ச்சு வாயிலில் பெரிய பெட்டியொன்றை வைத்து அதன் மேல் அமர்ந்து, விவிலிய நூலை விரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். விரைந்து வந்து கொண்டிருந்த குதிரைக்குளம்படிச்சத்தம் நின்றது. குனிந்து படித்துக் கொண்டிருந்த பாதிரியார் காதில் 'சாமி என்ற சொல் விழுந்தது. நிமிர்ந்து பார்த்தார் பாதிரியார் என்ன சேதி?’ என்றார். ‘சாமி, வெள்ளைப் படைகள் என்னை விரட்டி வருகின்றன அடைக்கலம்' என்றார் மருதரசர். கர்த்தரின் சீடர் உள்ளம் கனிவெய்தியது. அவர் தாம் அமர்ந்திருந்த பெரிய பெட்டியைத் திறந்து, 'உம், உள்ளே நுழைந்து கொள்' என்றார். பெட்டி மூடியது; பாதிரியாரின் வாசிப்பும் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் வெள்ளைச்சிப்பாய்களுள் பலர் எமதுதர் போலத்தலை தெறிக்க ஓடி வந்தனர். பாதிரியாரைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, எங்கே மருது? என்று அதட்டினர். பாதிரியாருக்குச் சினம் பொங்கியது. கடுகடுத்த முகத்தோடு ஆமாம் - மருதுவை என்மடிக்கு அடியில் பார்' என்றார் சற்றுக் கோபமாக. பாதிரியாரின் சிடுசிடுத்த முகத்தையும், கடுகடுத்த பேச்சையும் கண்ட கேட்ட கம்பெனிப் படை வீரர், இந்தப் பாதிரியார் ஓர் அப்பாவி, மருது இங்கே வரவில்லை போலிருக்கிறது' என்று எண்ணி, ஒரே பாய்ச்சலாக வேறு திசைக்குத் திரும்பினர். கும்பெனிப்படை தொலைந்து விட்டது என்று தெரிந்ததும் பாதிரியார் பெட்டியைத் திறந்தார். மேகத்திரையை விலக்கி வரும் மதியம் போல மருதரசர் வெளியே வந்தார். ‘சாமி, உங்கள் கருணையை ஒரு நாளும் மறவேன்' என்றார் பெரிய மருது. நான் என்ன செய்தேன்? கர்த்தரின் சீடன் நான் அடைக்கலம் என்றோரைக் காப்பது என் கடமை. அப்படியும் அதற்காக நான் பொய் கூடச் சொல்லவில்லையே! உண்மையைத்தானே சொன்னேன். அந்த முட்டாள்கட்கு மூளை ஏது என்றாராம் சிரித்துக் கொண்டே மருதரசர் உடம்பெல்லாம் இன்ப உணர்வு பொங்கியது. ஒலை ஒன்றைக் கொண்டுவரச் செய்து, சருகணிக் கிராமத்தை மாதா கோவிலுக்கே