பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 பேராசிரியர் ந.சஞ்சீவி சிறுவயலுக்கு அழைத்துச் சென்று விருந்தளித்துப் போற்றினான். ஆனால், அவ்வமயம் இவ்வளவு குறுகிய காலத்திலேயே நான் இந்நாட்டிற்கும் அவனுக்கும் கொடிய எதிரியாக மீண்டும் காளையார் கோவிலுக்குள் புகுவேன் என்று எள்ளளவும் எண்ணவில்லை. இவ்வுண்மையை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன். இவையெல்லாம் யாருடைய வாசகங்கள் என்று நினைக்கிறீர்கள்? இறுதி நாள்களில் தன்கையாலே மருதுபாண்டியரைப் பிடிக்க வேண்டும் - கொல்ல வேண்டும் - என்று பெருவேட்கை கொண்டிருந்த கல் நெஞ்சன் - வெள்ளைத்தளபதி கர்னல் வெல்ஷ் தன் இராணுவ நினைவுகள் என்னும் நூலில் எழுதியுள்ள மொழிகளே இவை மேற்கண்டவாக்கியங்கள் நமக்கு மருதுபாண்டியரின் அகப்பண்பையும் புறத்தோற்றத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றன அல்லவா? ஆம் கொடிய பகைவரும் தம் அடல் ஆண்மையையும் அருள் நெஞ்சத்தையும் நட்பின் சீர்மையையும் நினைந்து நினைந்து வியந்து வியந்து போற்ற வாழ்ந்த நல்வாழ்வு மருதிருவரின் பெருவாழ்வு வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாயினர் வீரமருது சகோதரர். வீரராய்ப் பிறந்தனர்; வீரராய் வளர்ந்தனர்; வீரராய் வாழ்ந்தனர்; வீரராய் மாண்டனர்! தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரையே சுதந்தர தேவியின் பலிபீடத்தில் உவகைக் கண்ணிரோடு உரிமையாக்கிய அவ்வுத்தமர்களின் வாழ்வே ஒரு வீர வரலாறு விடுதலைக்காவியம். தலை சிறந்த தேசபத்தர் ஒருவரைப் போற்றும் போது, பேரன்பு செய்தார் யாரே பெருந்துயரின் பிழைத்து நின்றார்? என்று பின்னாளில் பாடினார் பாரதியார். அவர் பாட்டின் உண்மையை விளக்க மருதிருவர் வரலாற்றினும் சிறந்த சான்று ஒன்றுண்டோ? மண்மகளின் தலைமகளாகிய தமிழ்த்தாய் பெற்ற இரு மாணிக்கங்களாகிய மருது சகோதரர்கட்கு சுதந்தரத்திற்காகப் போராடிச் சொல்லொணாத் துன்பங்கட்கு இரையாகி முடிவில் தங்கள் பொன்னுடலம் நீத்து அழியாப் புகழுடலம் பெற்ற மேலோர்கட்கு - விடுதலை இந்தியாவில் வாழும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் - அளிக்க வேண்டிய நன்றிக் காணிக்கைகள் - எத்தனையோ உண்டு. அக்கடமைகளுள் சிலவற்றையேனும் வழிபாட்டுணர்ச்சியோடு ஆற்றுவது வாயிலாகவே தமிழகம் தன் வீரப் பரம்பரையைப் பாதுகாக்க முடியும் என்ப்து திண்ணம். வீரர்களைப் போற்றாத ஒரு நாட்டில் - நன்றி உணர்ச்சி மங்கிப்போன ஒரு நாட்டில் மேலும் மேலும் வீரர்கள் பிறப்பது அருமை என்பது உலக அறிஞர்கள் பன் முறையும் வற்புறுத்திச் சென்ற பேருண்மை அன்றோ?