பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 176 தமிழகம், கல் தோன்றி மண் தோன்றாக் காலமுதல் நாட்டின் நல்வாழ்விற்காகப் போர்க்களம் புகுந்து ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து வீழ்ந்த காளைக்கு வீரக்கல் எடுத்து அதில் அவன் பீடும் பெயரும் எழுதிப் போற்றலைத் தன் உயிரினும் சிறந்த பண்பாடாகப் போற்றிய பெருமை வாய்ந்தது. அத்தகைய சிறந்த பண்பாட்டைக் கொண்ட சீரிய நாட்டின் குடிமக்களாய்ப் பிறந்த நமக்கு நம் தாயகத்தின் மானங்காக்கப் போரிட்டு மாண்ட மாவீரர்கட்குத்தக்க நினைவுச்சின்னங்களை எழுப்பியும் அவர்களின் பெரும்புகழை வையகம் எல்லாம் பரப்பியும் வீரவழிபாடு ஆற்றல் இன்றியமையாத பெருங்கடமை அன்றோ? மருது பாண்டியரின் புகழைப் பரப்பும் நூல்கள் பல இன்னும் தமிழ் மொழியில் வெளி வரவேண்டும். அவர்களின் வீர வரலாற்றைத் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் அறிந்து - உணர்ந்து - போற்ற வேண்டும். வெள்ளையர்களோடு மருது சகோதரர்கள் நடத்திய வீரப்போர் இந்திய விடுதலைப்போரில் பெருஞ்சிறப்புப் பெறத் தக்க சீர்மையை இந்நூலுள் பல இடங்களிலும் பரக்கக் கண்டுள்ளோம். எனவே, அப்போருக்கு வழி காட்டிய தளபதிகளாகிய பாஞ்சைச் சகோதரர்களின் புகழையும், அவர்களிற் சிறந்த வாழ்வு வாழ்ந்த மருது சகோதரர்களின் மாண்பையும் தமிழரல்லாதாரும் உணர்ந்து போற்றும் வகையில் இந்திய மொழிகள் பலவற்றிலும் இவ்விணையில்லா வீரர்களின் எழுச்சி மிக்க வரலாற்றைச் சிறந்த உரைநடை இலக்கியமாய் எழுதிப் பரப்பும் பணியில் தமிழக ஆட்சியும் இந்திய அரசாங்கமும் முனைய வேண்டும்: நல்லறிஞர்கள் பன்மொழிப் புலவர்கள் - அதில் ஈடுபட வேண்டும். இந்திய விடுதலைப் போரில் பின்னாளில் பங்கு கொண்ட எத்தனையோ பேரைப்பற்றிய வரலாறுகள் ஆங்கில மொழியில் வெளியாகி உள்ளன. ஆனால், அவ்வீரர்களின் வரிசைக்குத் தலைமை தாங்கும் மாவீரர்களாகிய மருதிருவரின் வரலாறு இன்னும் ஆங்கில மொழியில் முழு வடிவத்தில் எழுதப்படவில்லை. இக்குறையைக் களைய அறிஞர்களும் அரசாங்கமும் முன் வர வேண்டும். மருதிருவரின் வரலாற்றை இசைப் பாட்டாக எழுதித் தமிழ் நாட்டு நகரங்களிலும் கிராமங்களிலும் முழங்கச் செய்ய வேண்டும். கதையாய்க் கனவாய்ப் போன அவ்வீரர்களின் வரலாற்றைக் கலைச்சுவை பொருந்திய நாடகமாய் உருவாக்கி அரங்குகளில் நடிக்கச் செய்ய வேண்டும்.’’ பொன்னான வாழ்வு வாழ்ந்த அப்பெரியோர்களின் சீர் சான்ற வரலாற்றை வெள்ளித் திரையில் வாழ வைக்க வேண்டும்." சிவகங்கைச் சீமையின் தனிப்பெருந்தலைவர்களாய் இருபத்தோராண்டுகள் நல்லாட்சி நடத்திய காவலர்களாகிய மருது