பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 பேராசிரியர் ந.சஞ்சீவி வாலமத ரூபசுப னானந்த னானசெய மாலென்னை யுனதுசமுக வாசற்ப்ர பந்தகவி வாசரஸ் வதியென்ற மாத்ரமே வரவழைத்து மாதயவு செய்ததா லவன்மீதி யானுமொரு மயிலிசைத் தூதுசொல்ல மனமிக மகிழ்ந்ததிக வெகுமதிகள் செய்திந்த வையமதி லுமதுதுரைபேர் வளரவே புகழைமேன் மேலுமே துதியுமென வண்மைமொழி கூறவேயவ் வரிசைபெற்றவனை மிக வாழ்த்தியே தில்லைநகர் வந்துபொன் னம்பலத்தில் மருவுநடராசனைத் தெரிசனஞ் செய்துநல் வழிமார்க்க மெய்திவிரைவாய் வளமிகுந் திரிசிரபு ரத்தில்முத்துக்கிருஷ்ண மாலுதவி கொண்டுமிப்பாற் கோலமிகு தென்றிருப் புத்துரில் வந்துநங் குலதெய்வ மாகியருளே குடிகொண்ட காசிவயி ரவமூர்த்தி யிருபதங் கும்பிட்டி றைஞ்சியெனது குருவான ஞானசங்கரலிங்க மாமுனிக் குரிசிலை மனத்துள்வைத்துக் கோகனக மலரலரும் வாவிதனி லேபசிய கொட்டியும லர்ந்ததெனயான் குணமுற்ற தமிழ்வித்வ சனருற்ற வுயர்முக்ய கொலுவுனது சமூகம்வந்து குழவிதாய் முகநாடு மதுவெனக் கருணைபொழி குளிர்முகம தனை நாடினேன் குலவுசிவி கைக்கதிக விருதுமும் பளமுங்கொ டுத்துமுன் னிலைமைபூலாங் குண்டுவயலுந்தந்து மென்றுநின்றயவுளங் கொண்டெனைக் காத்தருள்வையே மயூரகிரிக் கோவை (1908) பக். 18-19. பார்க்க இதன் அச்சுப்பிரதியை யான் பயன்படுத்திக் கொள்ள அன்பு கூர்ந்து உதவியது டாக்டர் உ.வே.சா. அவர்களின் பேரர் உயர் திரு. க. சுப்ரமணிய ஐயர்.