பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 பேராசிரியர் ந.சஞ்சீவி 24. (1) மருது சகோதரர்கள் சிவகங்கை மன்னருக்கு வேட்டை நாய்களை வளர்த்தும், அடைப்பைக்காரத் தொழில் புரிந்தும் தொண்டுழியம் செய்து வந்தவர்கள் என்று லூவிங்டன்கடிதமும், புதுக்கோட்டை வரலாறும், கால்டுவெல் நூலும் கூறுகின்றன. இவ்வாறு கூறும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்குரிய ஆதாரங்களை யாண்டும் காட்டாதது குறிப்பிடத்தக்கது. (ii) லூவிங்டன் கடிதம் - பிற்சேர்க்கை எண். V. (iii) A generai History of Pudukkottai State, p.252. (iv) Caldwell's History of Tinnevelly, p.212. 25. (i) மரண வாக்கு மூலம் - இயல், 6 பார்க்க (ii) பெரிய மருதுவின் அழகிலும் ஆண்மையிலும் பெரிதும் தன் நெஞ்சைக் கொள்ளை கொடுத்த வேலு நாச்சி அவரைத் திருமணம் புரிந்து கொண்டாள் என்றும் கூறப்படுகிறது. மரண வாக்குமூலம் பார்க்க. (iii) வேலு நாச்சியோடு மருது சகோதரர்கள் நாடு திரும்பியதும் சில ஆண்டுகள் வேலு நாச்சியும் (1780-1790), அவள் மகளும் (1790-1793) நாடாட்சி புரிந்ததாகவும், வேலு நாச்சி மகள் வெள்ளைச்சிக்குப் பின் அவள் கணவன் (1793-1801) நாடாண்டதாகவும் புதுக்கோட்டை வரலாற்றின் ஆசிரியர் கூறுகிறார். so general History of Pudukkottai State, p.94. மருது பாண்டியர்களை அநீதியாக நாட்டைக் கைப்பற்றியவர்கள் என்று கருதி இவ்வாறு கூறப்படும் கருத்துகட்குச் சிறிதும் ஆதாரம் இல்லை என்றே தோன்றுகிறது. 26. மருது பாண்டியர் பணம் திரட்டச் செய்த முயற்சிகளின்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி செவிவழிச் செய்தியாய் வழங்கி வருகிறது. பார்த்திபனூர் என்னும் ஊரில் வைரவன் செட்டி என்ற பெருஞ்செல்வன் ஒருவன் இருந்தானாம். அவன்பால் பொருள் கேட்டு மருதரசர் ஆள் அனுப்பினார். 'நவாபுவின் பிடிப்பில் அகப்பட்டிருக்கும் சிவகங்கைச் சீமையின் மன்னரோ மருதரசர்? அவருக்கு நான் எதை நம்பிப் பணம் கொடுப்பேன்? வெள்ளைக் குதிரை ஏறி வெண்கொற்றக் குடை பிடித்து வெண் சாமரம் வீசிக்கொண்டு வெள்ளை மருது வீதியில் வேந்தராய்ப் பவனி வரும் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம், என்று வேடிக்கையாகப் பேசினானாம் பார்த்திபனூர் செட்டி. இதைக் கேள்வியுற்ற மருது பாண்டியர், 'அவனை விட்டுவிடுங்கள்; அவன் நாளை வருவதை அறியான், என்று சொல்லிவிட்டாராம் நகைத்துக் கொண்டே, பின்னொரு நாள் மருதுபாண்டியர் சீமையைக் கடனிலிருந்து