பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 பேராசிரியர் ந.சஞ்சீவி வகையினராவர். இவர்களது அன்ன சத்திரமும், மண்டபப்படியும் இவற்றைக்கும் குறைவின்றி நடைபெற்று வருகின்றன. இவர்கள் சத்திரத்திற்கு மருது பாண்டியரால் விடப்பட்ட கிராமங்களைந்தும் இப்பொழுதும் அதற்கேயுரியன வாயுள்ளன.' - மயூரகிரிக்கோவை, பக்கம், 21. 51. பிற்சேர்க்கை, எண் x, 52. சிவகங்கைச் சம்ஸ்தானத்தில் சர்க்கரைப்புலவர் மகமையென்றொன்றுமுளது. அது சேது சம்ஸ்தானத்தினின்றுஞ் சிவகங்கை பிரிவதற்கு முன் ஆதிநெட்டிமாலைச்சர்க்கரைப் புலவருக்குச் சேதுபதிகளாற் கொடுக்கப்பட்டதோ, அல்லது இவர் தகப்பனராகிய சர்க்கரைப் புலவருக்கு மருது பூபதியாற் கொடுக்கப்பட்டதோ நன்கு புலப்படவில்லை. - செந்தமிழ் 6 ஆம் தொகுதி, பக்கம் 365. 53. ஒரு சமயம் குதிரைமீதேறிச் சென்ற போது கம்பீரமாக ஓடி வரும் குதிரையின் அழகைப் பார்க்கக் கவுண்டன் கோட்டை என்னும் இடத்தில் இருந்த நாயக்க மரபைச் சேர்ந்த ஓர் இளம்பெண் மிகத் துடுக்காக வீட்டிலிருந்து வீதிக்கு ஓடிவந்தாளாம். வந்த பெண் அஞ்சி ஒதுங்கிச்சாலை ஒரத்தில் நில்லாமல், மகாராசர் குதிரைக்கு முன்னே குறுகுறுத்த விழிகளில் சிறிதும் அச்சமின்றி வந்து நின்றாளாம். பகைவரை எல்லாம் புறமுதுகு காட்டி ஓடச் செய்யும் தம் முன்னே - தம் குதிரையின் முன்னே - அஞ்சாது நின்ற இளங்கிளியின் பால் மருதரசர் மையல் கொண்டாராம். குதிரையை இழுத்து நிறுத்திவிட்டுப் பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து அடியேன் அரண்மனைக்கு எடுத்துச் சென்று இப்பாவையைக் கண்போலக் கருதிக் காப்பாற்றிக் கண்ணாலமும் செய்து கொள்கிறேன், என்றாராம். மருது மகிபரின் ஆசையையும் தம் குழந்தைக்கு வந்த யோகத்தையும் அறிந்த பெற்றோர் பெண்ணைப் பிரியமனம் இன்றிப் பிரிந்தார்களாம். அரண்மனையில் - அன்புப் பூஞ்சோலையில் ஆடிப்பாடி வளர்ந்த அழகு மங்கை மீனாட்சி, பருவம் வந்ததும் பாராளும் மருது வேந்தர்க்கு மாலையிட்டு மனையறமாம் நல்லறம் நடத்தினாளாம். படம் - பிற்சேர்கை எண் - 1. 54. பெருந்தொகை, செய். 1368. 55. செந்தமிழ், 3 ஆம் தொகுதி, பக்கம் - 294. 56. மருதரசரை விளித்துப் பாடப்பெற்ற பாடல் ஒன்று செந்தமிழ்த் தொகுதியிலும் பெருந்தொகையிலும் காணப்படுகிறது. ஆனால், அப்பாடலைத் தேடி வெளிப்படுத்திய சேற்றுர் சம்ஸ்தான வித்துவான் இராமசாமிக் கவிராயர் கூறுவது போலக் கருத்து விளங்காப் பாடலாக