பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பேராசிரியர் ந.சஞ்சீவி வேரறுப்போம்! என்று உறுதி கொண்டான். இதற்குள், தென்பாண்டிச் சீமையிலே இரு பெருஞ்சிங்கங்கள் கம்பெனி வெறியர்களைக் கருவறுக்கக் கங்கணம் கட்டியுள்ளன என்ற செய்தி வீரன் ஊமைத்துரைக்கு எட்டியது. அவன் மேனி சிலிர்த்தது; தோள்கள் விம்மின; மார்பு விரிந்தது. "விடுதலை வீரர்களே, புறங்காட்டாது போரிட்டுக் கொண்டே கோட்டையை விட்டு வெளியேறுங்கள். படுகாயம் உற்றோர், பெண்டிர், முதியோர், குழந்தைகள் அனைவரையும் கோட்டைக்கு வெளியே பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுங்கள்' என அவன் வீரத்திருவாய் புரட்சி வீரர்கட்குக் கட்டளையிட்டது. ஊமைத்துரையின் இக்கட்டளையைக் கேட்ட பாஞ்சை வீரர்கள், அணி அணியாக வெளியேறினார்கள், வாள் வீரர் சுற்றிலும் நடக்க, இடையே பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாத்துச் சென்றார்கள். ஆனால், இந்த நேரத்தில் வீர மறவர்கட்கும் வெள்ளை வெறியர்கட்கும் இடையே நடந்த போரை நினைத்தாலும் நெஞ்சம் நடுங்குகிறது! கம்பெனிப்படை வீரர்கள் வெறிகொண்டு வீர மறவர்களை வெட்டிக் குவித்தார்கள். குழந்தை என்றும் பெண் என்றும் பாராமல், கணக்கற்ற உயிர்களைக் கொன்று குவித்தார்கள் அக்கொலைகாரர்கள். அறுநூற்றவருக்கு மேற்பட்ட விடுதலை வீரர் பலியாயினர். அவர்களுள் பலர் பெண்டிர். பாஞ்சைக் கோட்டையைச் சுற்றிலும் பிணக்காடு, குருதி வெள்ளம், சாவொலி. ஆம் பின்னாளில் நடந்த பாஞ்சாலப் படுகொலையினும் பல்லாயிரம் மடங்கு கொடுமையான படுகொலையைப் பாஞ்சைக் கோட்டை நிழலிலே நடத்தினார்கள் நாடோடி வெறியர்கள். இத்தனைக்கும் தப்பி இரண்டாயிரவருக்கு மேற்பட்ட வீரர் வெளியேறினர். அவர்களுள் ஊமைத்துரையும் ஒருவன். - கோட்டையிலிருந்து வெளியேறி வடக்கு நோக்கிச் சென்றனர் புரட்சி வீரர். அவர்களைக் கர்னல் அக்நியூதன் படைவீரருடன் விரட்டிச்சென்றான். சிறிது தூரம் சென்றதும், மறவர் படை சிங்கம் போலச் சினங்கொண்டு திரும்பியது. கர்னல் அக்நியூவின் படைக்கும் ஊமைத்துரை படைக்கும் இடையே கடும்போர் மூண்டது. வெள்ளை வெறியர்களை வேண்டுமட்டும் வெட்டிச் சாய்த்தான் வீரன் ஊமைத்துரை. அவன் நிகழ்த்திய போர் மனித சக்திக்கும் மீறியதாகவே விளங்கியது. இறுதியில் அவன் உடல் எல்லாம் வெட்டுண்டு, தரையில் உணர்ச்சியற்றுச் சாய்ந்தான். அந்நிலையில் பிணக்குவியலின் நடுவில் தன் வீரமகனைத் தேடி வந்தாள் ஒரு மறக்குல மங்கை இறுதியாகத் தன்வீர வயிறு ஈன்ற தீரனையும் கண்டாள்; உயிர் போகும் நிலையில் உள்ள அவனை மார்புறத் தழுவினாள். ஆவி பிரியும் நிலையில் இருந்த அவ்வீர மைந்தன், 'தாயே, நான் போகிறேன்; அதோ என் சாமி அவரைக் காப்பாற்று. போ போ!' என்று கூறித் தலை சாய்த்தான். மைந்தன் இட்ட கட்டளையை மனத்தில் வைத்து,