பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பேராசிரியர் ந.சஞ்சீவி ஒரு பெருந்தகை. அவரை நான் 1973-ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் சந்திக்கப் போனேன். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழக வகுப்பில் மாணவனாக இருந்திருக்கிறேன். அக்காலங்களில் அவருக்கு என்னையோ எனக்கு அவரையோ தனிப்பட்டமுறையில் பழக்கமில்லை. அவரது அறையின் வெளியே 'உத்திரவின்றி உள்ளே வரவும்' என்று எழுதியிருந்த தொடர்கள் எனக்கு அவர்மேல் மரியாதையை ஏற்படுத்திற்று. பார்த்தேன், பேசினேன், எழுந்து வந்தேன். அது ஒரு நல்ல நேரம். அதற்குப் பிறகு அவரிடம் 5 ஆண்டுகள் ஆய்வு மாணவனாக இருக்கும் வரம் பெற்றேன். ஒரு குருவாக - ஒரு தந்தையாக - ஒரு நண்பராக என்னுடன் பழகினார். அவரது முதல் ஆய்வு மாணவன் என்பதில் எனக்கும் எனது கடைசி குரு அவர் என்பதில் அவருக்கும் மிகுந்த பெருமிதம் இருந்தது. அவரது பல்வேறு ஆர்வங்களில் ஒன்று வரலாற்றுத்துறை. அதுவும் வீர மறவர்களின் வரலாற்றையும் விடுதலை இயக்கத்தின் வரலாற்றையும் பெரிதும் நேசித்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் 1956 முதல் எழுதிவந்திருக்கிறார். தன் வாழ்க்கை வரலாற்றை கூட எழுதி வைக்க வேண்டும் என்று விரும்பினார். முடியவில்லை. இந்தத் தொகுப்பை மாணவர் என்ற முறையில் நான் செலுத்தும் நன்றியாகவும் வைத்துக் கொள்ளலாம். தமிழரின் பெருமைக்கும் பீடுக்கும் இது ஒரு பதிப்புப் பட்டயம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். சிவகங்கைச் சிங்கங்கள், முதலில் முழங்கிய முரசு, வீரத்தமிழகத்தில் விடுதலை வேள்வி, வெள்ளையர் கண்ட தமிழ் வீரம், விடுதலை இயக்க வரலாறு. வெள்ளை ஆதிக்க வரலாறு, போரும் வேரும் என்று இவரால் எழுதப்பட்ட வரலாற்றுக் கட்டுரைகள் கிடைக்காமல்