பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போய்விட்டன. இவரது நடை இந்நூலுக்கு மேலும் மெருகேற்றி வரலாற்று இலக்கியம் என்று சொல்லத்தக்க வகையில் செழுமையாக உள்ளது. உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க நடையிலேயே ஒரு வீர வரலாற்றினை எழுதுவது சாலச் சிறந்ததுதான். இது மருது சகோதரர்களின் விடுதலைப் போராட்டத் தைப் பற்றி விரிவான நூலாகும். இதில் பேராசிரியரால் எழு தப்பட்ட மானங்காத்த மருதுபாண்டியர் (1954) மற்றும் மருதிருவர் (1956) எனும் இரு நூல்களும் பிழைகள் திருத்தப்பட்டு உள்ளன. இரண்டும் சிவகங்கைச் சீமையின் வெள்ளையருக்கு எதிரான போர்களையே விவரிக்கின்றன. இந்நூல் வெளிவர பெரிதும் உதவியவர் எனது பேராசிரியரின் மகளும் எனது சகோதரியுமான முனைவர் எழிலரசி அவர்களே. அவரது ஒப்புதலும் ஒத்துழைப்பும் என்னை நெகிழவும் மகிழவும் செய்தன. அவரது குடும்பத்திற்குக் காவ்யா மட்டுமல்ல தமிழ் உலகமும் கடமைப்பட்டுள்ளது. - காவ்யா சண்முகசுந்தரம்.