பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பேராசிரியர் ந.சஞ்சீவி பணியாதிருந்தான். ஆபத்துவரின் தன்னினும் பலம் பொருந்திய கம்பெனிப் படைகள் தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. எல்லாவற்றிலும் விந்தையானது, வெள்ளை நாடோடிகள் பாளையக்காரர்களை முற்றிலும் முறியடித்து வெற்றி பெறும் வரை தன் திருமணத்தைக் கூடத் தள்ளி வைக்க அவன் உறுதி கொண்டதே. என்னே அவன் ஆண்மை அதோடு புதுக்கோட்டையின் ஒரே படைத்தளமாயும் பலம் பொருந்திய கோட்டையாயும் இருந்த திருமயத்தையும் பிரிட்டிஷ் துருப்புகட்கே ஒப்படைத்தான் தொண்டைமான். அதோடு அமைந்தானா? நாலே நாள்களில் மூவாயிரம் படை வீரர்களுடன் இன்ஸ் என்பவனுக்குத் துணை புரிய நத்தம் என்னும் இடத்திற்குப் பேரரசு வெறியர்கட்குப் பக்கபலமாகப் படை திரட்டிப் போனான். இங்ங்னம் தமிழகத்தின் விடுதலை வீரர்கட்கு எதிராகத் தமிழகத்திலேயே துரோகிகள் முகாமை உருவாக்குவதில் வெற்றி கண்டவன் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாகத் தஞ்சாவூர் தளபதியாய் இருந்த கர்னல் பிளாக்பர்ன் என்ற வெள்ளையன். இவ்வாறு தமிழகத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் பெரிய அளவுக்கு வெற்றி கண்ட கம்பெனி அதிகாரிகள், மருது பாண்டியர்களுக்கு எதிராக முதன் முதல் மீண்டும் 1801 ஆம் ஆண்டு, மே மாதம் 29 ஆம் நாள் போர் தொடங்கினார்கள். பாஞ்சைக் கோட்டையைத் தகர்த்தெறிந்த வெற்றி வெறி கம்பெனிப்படையின் தலைக்கேற, ஐந்தே நாள்களில் மீண்டும் போர் தொடங்கப்பட்டது. அப்போர் அவர்கள் உயிரையும் உடைமையையும் வாட்டி வதைக்கும் கொடிய போர் ஆயிற்று. பாஞ்சைப் பதியைப் பிடிக்கப் போரிட்ட கம்பெனிப் படைகளில் ஒரு பகுதியை மட்டும் அங்கேயே நிறுத்தி வைத்து, அக்கோட்டையைத் தரை மட்டமாக்கி, அந்நிலப் பகுதி முழுதும் உப்பும் வரகும் வாரி இறைத்து உழும்படி கட்டளை பிறப்பித்த கம்பெனித் தளபதிகள், எஞ்சிய படையுடன் ஊமைத்துரைதப்பிவிட்டானே! இனி மீண்டும் எந்தக் கோட்டையுள் இருந்து கொண்டு நம்மைக் கூவி அழைப்பானோ இன்னும் நம்முள் எத்தனை பேர் எமனுலகம் சேர்வோமோ என்று எண்ணியவர்களாய், மேஜர் ஷெப்பர்டு என்பவன் தலைமையில் 26 மைல் தொலைவில் உள்ள நாகலாபுரத்திற்கு இராணுவ நடை போட்டனர். அங்கே சென்றதும், மே மாதம் 28 ஆம் நாள் புதுப்படைப் பலத்தைச் சேர்த்துக் கொண்டு, மீண்டும் சோதனை நிறைந்ததொரு நிலைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டு, கமுதியை நோக்கி விரைந்தது கம்பெனிப் பட்டாளம். இப்படையின் வருகையைச் சிவகங்கைச் சீமையில் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டு, வரட்டும் வெள்ளைப்படை நாய்க்கும், நரிக்கும், பேய்க்கும், எமனுக்கும் வயிறார விருந்து வைப்போம்! என்று கூர்வாளைத் தீட்டிய வண்ணம் தமிழர் படை திரண்டிருந்தது.