பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 46 வீடு வாயில்களை எல்லாம் மறந்து, உயிரையும் வெறுத்து, மருது பாண்டியரும் ஊமைத்துரையும் காட்டிய தியாக நெறியில் நின்று போராடி, தலையும் கையும் காலும் கழுத்தும் மார்பும் துண்டிக்கப்பட்டும் சுடப்பட்டும் மாண்ட அம்மாவீரர்கள் சிந்திய குருதியால் காளையார் கோவில் காடு பெருந்துய்மை எய்தியது. தன் நாட்குறிப்பில் ஓரிடத்தில் கர்னல் வெல்ஷே குறிப்பது போல, அக்காட்டின் எட்டுத்திசையிலும் வீரத் தமிழ் மறவர்களது சிவந்த குருதி கோலமிட்டது போல ஒழுகிக் கிடந்ததாம் ஆம் தாய் நாட்டின் மானத்தைக் காக்கத் தங்கள் வீரக் குருதியைத் தமிழ் மண்ணில் சொரிந்த அம்மறவர்களுடைய பொன்னடிகளை எந்நாளும் தமிழ் இனம் நினைவில் வைத்துப் போற்றும், இத்தகைய தமிழ் வீரர்களுடைய துணிச்சல் நிறைந்த போராட்ட முறைகளை நினைத்தாலே நம் நெஞ்சம் வியப்பாலும் வீரத்தாலும் விம்மிதம் கொள்ளும் காளையார் கோவில் காட்டில் நடந்த கடும்போரின் இறுதிக் கட்டத்தை நம்மால் மறக்கவே முடியாது. காட்டை அழித்துப் பாதை அமைக்கும் வேலையில் இறங்கியிருந்த கம்பெனிப் பட்டாளம், போராடிப் போராடி நாலு மைல் தூரம் முன்னேறிவிட்டது; காளையார் கோவில் கோபுரமும் கண்ணுக்குப் புலனாகியது. இடையே இருக்கும் கண்மாய்க் கரையைத் தாண்டினால், காளையார் கோவில் நம் கையில்தான்' என்று இறுமாப்புக் கொண்டது வெள்ளைப்படை. இரவெல்லாம் இந்த இறுமாப்பில் வெறி கொண்டு குடித்துக் கூத்தாடியது கம்பெனிப் பட்டாளம்: அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால், காளையார் கோவில் கோபுரம் காணவில்லை. கண்மாய்க் கரை மண்சுவர் எழுப்பப் பெற்று, பெருமலை போல உயர்ந்து கிடந்தது கிட்ட நெருங்கினால் குண்டுகள் டயார் டபார் என்று வெடித்தன. ஈட்டியும் வேலும் எதிர்த்து வந்து பாய்ந்தன. பதிலுக்குக் கம்பெனிப் படைகள் பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்தாலோ, அவை அத்தனையும் பொத்துப் பொத்தென்று போய் விழுந்தன. வெடித்த குண்டுகள் எல்லாம் வீணாயின. காரணம் என்னவென்று ஆராய்ந்த ஆங்கிலப் படைஞர், அப்போதுதான் உண்மை உணர்ந்தனர்; அடே அது பாஞ்சைப்பதியில் ஊமையன் எழுப்பிய கோட்டையைப் போன்றே வியத்தகு மண்மலை' என்று அறிந்து மனம் இடிந்து போயினர். இவ்வாறு 'ஆப்பசைத்த குரங்கு போல’க் காட்டுக்கிடையே சிக்கிக் கொண்ட கம்பெனிப் பட்டாளத்தை விரட்டி விரட்டித் தாக்கினர் தமிழ் மறவர். இந்தத் தாக்குதலுக்கு உட்பட்டும், யார் செய்த புண்ணியத்தாலோ தப்பிப் பிழைத்து வந்து, நடந்தவற்றை எல்லாம் மிகச் சிறந்த நாட்குறிப்பாக வரைந்து வைத்திருக்கும் வெள்ளைக் கர்னல் வெல்ஷ் கூறுவது போல மிகவும் அருகில் இருந்தே குண்டுகள் சரமாரியாய் வரும். ஆனால், ஆள்கள் மட்டும்