பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கர்னல் வெல்ஷைக் கேளுங்கள்! கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் தமிழகத்தின் உரிமைக்காகப் போரிட்ட வீரர்களுக்கு முதன்மையான பகைவர்களுள் ஒருவன். அவனைப் பற்றி இதற்கு முன் நாம் பல சந்தர்ப்பங்களிலும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதற்கு இன்றியமையாக்காரணம், போர் வெறி பிடித்த அவன், வரலாற்று உணர்ச்சியோடு எழுதி வைத்துள்ள 'இராணுவ நினைவுகள் என்ற புத்தகமே. நாட்குறிப்புகள் போல அவன் வரைந்து வைத்துள்ள செய்திகள் நம் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவன. பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கிய விடுதலைப் போரில் தீவிரப் பங்கு கொண்டு. இறுதியில் மருது பாண்டியரையும் பிடிக்க வேட்டை நாய் போல அலைந்து திரிந்த இந்த வெல்ஷ், மருது சகோதரர்களுக்கு நெருகிய நண்பனாய் இருந்து. பின்பு மிகக்கொடிய பகைவனாய் மாறினான் என்பதைப் பார்த்தோம். தமிழகத்தின் விடுதலை வீரர்கள் நடத்திய முதற்பெரும்போரின் இறுதி நிலையைப் பார்த்துக் கொண்டு நிற்கும் நாம், இந்த விடுதலைப் பகைவன் வாயிலாகவே தெரிந்து கொள்ள வேண்டிய திடுக்கிடும் செய்திகள் இன்னும் சில இருக்கின்றன. பாஞ்சைப் பகுதியில் வீரன் ஊமைத்துரையைத் துக்கிலிட்ட பீரங்கி மேட்டையும் வெள்ளைக்காரர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களையும் தவிர, மற்ற இடங்கள் யாவும் நாசமாக்கப்பட்டு, உழுது உப்புடன் வரகைக் கலந்து விதைத்து. ஆமணக்குச் செடிகளை நடும் படியும், அப்பகுதியிலே எந்தத் தமிழ் மகனும் தலை காட்டக் கூடாது என்றும் பிரிட்டிஷ் பேரரசு கட்டளை இட்டது. குடி மக்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அந்த மண்ணுக்கு இருந்த ஆற்றல் கம்பெனியானையன்றி வேறு யாருக்கும் அவ்வளவு நன்றாக, பட்டறிவு வாயிலாகத் தெரியாது அல்லவா? தப்பித் தவறி யாரேனும் ஒரு பிடி மண்ணை அங்கிருந்து அள்ளினாலும் அவர்கள் வெள்ளையன் குண்டுக்கு இரையாகும் நிலையை ஏற்படுத்தினார்கள் கம்பெனி அதிகாரிகள். மருது சகோதரர்களையும் ஊமைத்துரையையும் கைது செய்த கம்பெனிப்பட்டாளம், அவர்களுடைய உற்றார், உறவினர், நண்பர். வேலையாள்கள் ஆகிய அனைவரையும் கைது செய்திருந்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டோருள் துக்கிலிட்டுக் கொலை செய்யப்படாமல்