பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 82 வழங்கப்பட்டது. இவற்றை எல்லாம் பாண்டி நாட்டின் பேரரசர் என்ற முறையிலேயே திருமலை நாயக்கர் செய்தாராம். தளவாய் சேதுபதியை அடக்கப் பெரும்படை புறப்பட்டது. அதற்குத் தலைமை தாங்கினார் சரித்திரப் புகழும் இலக்கியப் புகழும் ஒருங்கே பெற்ற இராமப்பையர் என்னும் தளகர்த்தர். கடும் போர் நடைபெற்றது. ஆனால், சேதுபதியை வெற்றி கொள்ள முடியவில்லை. இராமேசுவரத் தீவில் பாதுகாப்பான அரணுக்குள் தங்கியிருந்து மாற்றானைக் கதி கலங்கச் செய்தார் சேதுபதி: தீவைச் சூழ்ந்துள்ள ஆழமான நீர்ப்பரப்பை எதிரிகள் எளிதில் கடக்க இயலாதவாறு ஆவன செய்தார். ஆனால் கூர்த்த மதியும் படை ஆற்றலும் மிக்க பொறி இயல் வல்லார் துணை கொண்டு எவ்வாறோ தீவுக்குள் படையுடன் நுழைந்தார் மதுரைத் தளபதியாரான இராமப்பையர் என்பவர். இதற்கு உதவியாக இலங்கை, கொச்சி என்னும் இடங்களிலிருந்து ஐந்து கப்பல்களில் பலர் ஐரோப்பியர் இறக்குமதி செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது. நுழைய முடியாத அரனுக்குள்ளும் நுழைந்து விட்டார் இராமப்பையர். வெற்றித்திரு அவர் வியன் தோள்களை மேவும் நேரம்: திடீரெனத் தளகர்த்தர் இராமப்பையரின் மூச்சு முடிந்தது. எனினும், அவர் மருமகன் அவர் பதவியை ஏற்று மாமனுக்கு மருகன் இளைத்தவனல்லன் என்று எவரும் கூறும் வண்ணம் போர் புரிந்து வெற்றி கொண்டான். தளவாய் சேதுபதியும் அவர் உறவினராகிய தணக்கத்தேவரும் கைது செய்யப்பட்டு, மதுரைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்; அங்கு இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுப் படுகுழி ஒன்றில் தள்ளப்பட்டனர். தளவாய் சேதுபதியின் நிலை இவ்வாறு ஆயினும், தம்பித் தேவரால் நாட்டாட்சியை நிம்மதியாக நடத்த முடியவில்லை. தமக்கு எதிராய்த் தளவாய் சேதுபதியின் தமக்கை பிள்ளைகளான இரகுநாதத் தேவரும் நாராயணத் தேவரும் நாளும் கலகம் புரிவதை எதிர்த்து அடக்க வேண்டிய இடர்ப்பாடு மிகுந்த வண்ணம் இருந்தது. தொல்லை பொறுக்க முடியாமல் தம்பித்தேவர் மதுரைத் திருமலை நாயக்கர் முன்னிலையில் மீண்டும் சரண் புகுந்தார். ஆனால், இம்முறை நாயக்கரின் கடைக்கண் அருள் தம்பித்தேவருக்கு அவ்வளவாக வாய்க்கவில்லை. மேலும், இச்சந்தர்ப்பத்தில் மறவர் நாட்டில் கொலையும் கொள்ளையும் களவும் கலகமும் மலிந்தன. அடக்கி ஆள அரசனில்லாக் குறையைப் பயன்படுத்திக் கொண்டு வழிப்பறி செய்வோர் நாட்டின் முடிசூடா மன்னராயினர். எங்கும் அச்சமும் அநீதியும் தலை விரித்தாடின. இந்நிலையால் பெரிதும் துன்புற்ற இராமேசுவர யாத்திரிகர்கள் திருமலை நாயக்கரிடம் சென்று தங்கள் குறை தீர்க்க முறையிட்டார்கள், தளவாய் சேதுபதியையே மீண்டும் அரசராக்க வேண்டுமென்று மன்றாடினார்கள். திருமலை நாயக்கரின் திருவுள்ளம் கனிந்தது. யாத்திரிகர்களின் வேண்டுகோளுக்கு அவர் செவி சாய்த்தார். தளவாய் சேதுபதி வெற்றி