பக்கம்:மானிட உடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பொதுக் குறிப்புக்கள் 5 பண்புகளால் ஒன்ருே டொன்று தொடர்புள்ள உள்ளு அறுப்புக்கள் அல்லது அமைப்புக்களின் தொகுதி மண்டலம் எனப்படும்; கூறு என்றும் இதனை வழங்கலாம். அது உடலின் முக்கிய செயல் ஒன்றுக்கு அடிப்படையாக இருக்கக்கூடியது. இந்தப் புத்தகத்தில் மானிட உடலின் பல்வேறு கூறுகளின் அமைப்பைப்பற்றியும் அவற்றின் செயல்களைப்பற்றியும் தெளி வாக உணர்த்துவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளது. அனைத்தையும் தெளிவாக உணர்ந்தால்தான் அவற்றின் அடிப் படையாக அமைந்துள்ள மானிட உடலைப்பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு அத்தியாயத் திலும் ஒரு குறிப்பிட்ட மண்டலத்தைப்பற்றிக் கூறப்பெற் றிருக்கிறதே யன்றி, தனிப்பட்ட ஒர் உள்ளுறுப்பு அல்லது உடலின் யாதாவது ஒரு பகுதியைப்பற்றிக் கூறப்பெறவில்லை. உடல்-நாடு : ஒப்புமை நமது உடலை, பல மாநிலங்களேக் கொண்ட ஒரு நாட் டுடன் ஒப்பிடலாம். அவ்வாறு ஒப்பிட்டால் மாநிலங்கள் உடலி அலுள்ள பல உள்ளுறுப்புக்களுக்கு ஒப்பாகும் ; உடலிலுள்ள உயிரணு நாட்டிலுள்ள ஒரு தனிப்பட்ட குடிமகனுக்கு ஒப்பாகும். ஆல்ை, உள்ளுறுப்புக்கள் மண்டலங்களுடன் இணைந்து செயற்படும்போது இந்த ஒப்புமை சரியாகப் பொருந்துவதில்லை. எடுத்துக்காட்டாக, மூச்சு மண்டலம் என்பது மூக்கிலிருந்து நுரையீரல் வரையிலுமுள்ள உடற் பகுதியினுள் காற்று நழைவதற்கும் நுரையீரலிலிருந்து வாயுக்கள் அகற்றப் பெறுவதற்கும் துணையாகவுள்ள உள்ளு அப்புக்களினுடையவும் அமைப்புக்களினுடையவும் தொகுதி யாகும். இனப் பெருக்கமண்டலத்தில் குழந்தையின் தோற் றத்திலிருந்து அதன் வளர்சசிவரையில் சம்பந்தப்பட்ட எல்லா உள்ளுறுப்புக்களும் அவற்றுடன் தொடர்புள்ள வழிகளும் அடங்கியுள்ளன. மேற் கூறிய மண்டலங்களில் எதுவும் தனித்து இயங்க முடியாது. எனவே, ஒரு முறையில் எடுத்துக்காட்டாக மூச்சு மண்டலம் அல்லது இனப் பெருக்க மண்டலத்திலுள்ள உள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/13&oldid=865866" இலிருந்து மீள்விக்கப்பட்டது