பக்கம்:மானிட உடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மானிட உடல் ளுறுப்புக்கள் இயங்குவதற்கு எல்லா மண்டலங்களும் செயற் பட வேண்டியுள்ளன. குருதியோட்ட மண்டலம் சரியான முறையில் குருதியை உடலெங்கும் அனுப்பாவிடில், மூச்சு மண்டலம் தொடர்ந்து இயங்க முடியாது. நுரையீரலிலிருந்து வரும் உயிரியம் இல்லாவிடில் இதயத் துடிப்பு இல்லாது போய் விடும். இந்தப் புத்தகத்தில் உட்லிலுள்ள எல்லா உள்ளுறுப் புக்களின் விவரங்களையும் அவற்றின் செய்கைகளையும் கூறு வதுடன், அவை ஒன்ருெடொன்று கொண்டுள்ள நுட்பமான தொடர்புகளையும் எடுத்துக்காட்டுவதே நம் நோக்கமாகும். ஒரு மண்டலம் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் அடங்கிவிடும் என்று நினைத்தல் கூடாது ; அவ்வாறு கருது வது தவறு. உண்மையில், அவற்றின் பகுதிகள் ஒன்றற் கொன்று தொலைவாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக மண்டையோட்டினுள் ளிருக்கும் தலைச்சுரப்பி, எண்டோ கிரீன் மண்டலத்திலுள்ள பிறச்சப்பிகளிருக்கும் இடத்திற்கு நெடுந்தொலைவிலுள்ளது. (புகைப் படம் - கடு-ஐப் பார்க்க.) எலும்பு மச்சை குருதி மண்டலத்தைச் சேர்ந்தது ; எலும்பு மண்டலத்தைச் சேர்ந்தது அன்று. என்ருலும், மச்சை எலும்புக் கூட்டினுள் அடங்கியிருக்கின்றது. (படம் -78-ஐப் பார்க்க.) உயிரணு உடலில் உயிருள்ள மிகச் சிறிய பகுதி சிற்றறைபோலிருக் கும் உயிரணுவாகும்; (படம்-3) ஆங்கிலத்தில் சிற்றறைக்கும் உயிரணுவிற்கும் செல் ' என்றே பெயர் வழங்குகிறது. எனவே, செல் என்ற பெயரையுடைய உயிரணு கேன் கூட்டின் சிற்றறை என்ற கவருண எண்ணத்தை உண்டாக்கு கிறது. உண்மையாக் நோக்கினல், உடலின் உயிரணு நுட்ப மான சவ்வில்ை முழுதும் மூடப்பெற்றுள்ள ஒரு பொருள். இந்தச் சவ்வின் வழியாகக் குறிப்பிட்ட அளவு பாய்மமும் பிற பொருள்களும் உள்ளும் புறம்புமாகச் செல்லக் கூடும். இவ்வாறு நியதிப்படுத்தும் சவ்வு உயிரணுவின் உயிர் வாழ்

  • Cell
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/14&oldid=865888" இலிருந்து மீள்விக்கப்பட்டது