பக்கம்:மானிட உடல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் I35 பான நிலைக்கு வரும்வரையில் நேரிடும் மாறுபாடுகள் உற்று நோக்கப்பெறுகின்றன. 8. உடல்வன்மையுடனுள்ள ஒரு பிராணிக்குச் சுரப்பியின் சாாம் தரப்பெற்று அதனுல் நேரிடும் விளைவுகள் குறித் துக்கொள்ளப் பெறுகின்றன. எண்டோகிரீன்களைப்பற்றிய நம்முடைய அறிவின் பெரும பகுதி ஒன்று அல்லது இரண்டு எண்டோகிரீன் சுரப்பிகளின் கோயில்ை பிடிக்கப்பெற்ற நோயாளிகளிட மிருந்து திரட்டப் பெற்றதாகும். எண்டோகிரீன்களின் நோய்கள் இரண்டு விதமானவை. 1. சுரப்பியையே சிதைக்கக் கூடிய அல்லது அதன் செயலைச் சீர்கெடுக்கக் கூடிய நோய்கள். 2. சுரப்பியை அதிகச் சுறுசுறுப்பாகச் செய்யக் கூடியவை. இந்த நோய்களைப் பற்றியும் அவற்றின் விளைவுகளைப் பற்றியும் உற்று நோக்கியதை ஒரளவு பிராணிகளின் பரி சோதனைகளுடன் ஒப்பிடலாம். ஆயினும், பிராணிகளின் பரிசோதனைகளால் கண்டறிந்த மெய்ம்மைகள் மனிதர்களின் பரிசோதனைகளுடன் பொருந்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் மறத்தல் கூடாது. இம் மாதிரியே மனிதர்க ளிடம் உற்று நோக்கின புள்ளி விவாங்கள் பிராணிகளுக்குப் பொருந்தாதிருக்கவும் கூடும். எல்லா அறிவியல் ஆராய்ச்சியி லும் இவ்வுண்மை பொருந்தும்பொழுது எண்டொகிரீன் இயலைப்பற்றிய ஆராய்ச்சியில் இது இன்னும் சிறப்பாகப் பொருந்துகிறது. எண்டோகிரீன் சுரப்பிகளைப்பற்றிச் சிறந்த முறையில் அறிந்துகொள்ள வேண்டுமானுல் ஒவ்வொரு சுரப்பியையும் தனிக் கனியாகப் பரிசீலனை செய்வதே சிறந்தது என்று கருத இடமுண்டு. அடித்தலைச் சுரப்பி இந்தச் சுரப்பியைப்பற்றி முதலில் தொடங்குவது மிக வும் பொருக்கமாகும். காரணம், அவற்றின் பல ஹார்மோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/159&oldid=865926" இலிருந்து மீள்விக்கப்பட்டது