பக்கம்:மானிட உடல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மானிட உடல் படம் 40. அடித்தலைச் சுரப்பி. (கருமையான இடத்தால் காட்டப்பெற்றுள்ளது.) களில் சில, நேரடியாகப் பிற எண்டோகிரீன் உறுப்புக்களின் செயலைக் கட்டுப்படுத்தக் கூடியவை. அடித்தலைச் சாப்பி மண்டையோட்டின் அடிப்புறத்திலுள்ள ஒரு எலும்புச் சிமிழினுள் அமைந்திருக்கிறது (படம் 40). அது மிகச் சிறிய உறுப்பு ; நன் முறையில் குருதிக் குழல்களால் நிறைந்தது ; அதனைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றுதல் கடினம். உடற் கூறு முறைப்படி நோக்கினுல் அடித்தலைச் சுரப்பி மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது ; அவை அடித்தலை முன் பகுதி, அடித்தலைப் பின் பகுதி, நடுப் பகுதி என்பவை. அடித் தல்ை முன் பகுதியும் அடித்தலைப் பின் பகுதியும் உடலியலின் அடிப்படையில் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. நடுப் பகுதியின் செயல்கள் யாதாவது இருப்பினும் அவற்றைப் பற்றி இன்னும் அறியக்கூட வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/160&oldid=865930" இலிருந்து மீள்விக்கப்பட்டது