பக்கம்:மானிட உடல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 42 மானிட உடல் மிருந்து நீக்கிவிடலாம். மனிதர்களிடமிருந்து அதனை நீக்கி ல்ை தீங்கு பயக்காதா என்பதைப்பற்றி இன்னும் நிச்சய மாகத் துணியக்கூட வில்லை. எனினும், அட்ானலினைச் சுரந்து உடலுக்குத் தாவல்ல வேறு உறுப்புக்களும் உள்ளன என் பதை மட்டிலும் கூறி அமைதல் இது சமயம் சாலும் , மாங்காய்ச் சுரப்பியின் புறணிதான் உயிர் வாழ்வதற்கு மிக வும் இன்றியமையாதது. மாங்காய்ச் சுரப்பியின் புறணி ACTH னினச் சுரக்கும் அடித்தலை முன் சுரப்பியின் நேர்க் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியுள்ளது. சாதாரணமாக, புறணி ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன; ஆனல் ACTH இல்லாவிடில் புறணி யில் ஹார்மோன் உற்பத்தி நின்று விடுகிறது. மாங்காய்ச் சுரப்பியின் புறணியால் உற்பத்தி செய்யப் பெறும் ஹார் மோன்களால் பாதிக்கப்பெருத வளர்சிதை மாற்றத்தை விளை விக்கும் செயல்களே மனிதர்களிடம் இல்லை என்று சொல்லி விடலாம். ஆற்றலை உண்டாக்கவும் சேமிக்கவும் சருக்கரை யும் கொழுப்புப் பொருள்களையும் பயன்படுத்துவது ஒரளவு இந்த ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப் பெறுகின்றன. பாலூட்டிகள் மாருத உடல் சூட்டு நிலையும் குருதியமுக்கமும் உண்டாக்கிக்கொள்ளும் திறனை அடைவதற்கு ஒரளவு இவை துணைசெய்கின்றன. இவையின்றி மனித உடல் அகச் சூழ்நிலையாலும் புறச் சூழ்நிலையாலும் உண்டாகும் இடுக் கண்களைத் தாங்க முடியாது. சூழ்நிலையால் உண்டாகும் இடுக் கண் என்ருல் ஏதாவது ஒரு மூலத்திலிருந்து உடல் பற்றியும் உள்ளக் கிளர்ச்சிபற்றியும் பெறும் தாண்டலேயாகும். (எ-டு) குளிராலும் சூட்டாலும் உயரத்தாலும் அதுபவிப்பை ; தேர்வுகளால் விளைபவை ; உடலுள் நேரிடும் ஊறுகளால் உண்டாகுபவை , இறுதியாக, எந்த நோயாலும் ஏற்படுபவை. மாங்காய்ச் சுரப்பியின் புறணியால் உற்பத்தி செய்யப்பெறும் ஹார்மோன்கள் உடல் உயிருடன் இருப்பதற்குக் துணை புரிவதுடன், அந்தத் தாண்டல்களைத் திறனுடன் எதிர்த்துச் சமாளிக்கவும் உதவுகின்றன. இத்தகைய இடுக்கண்கள் முதன் முதலாக நாம்பு மண்டலத்தால் ஏற்றுக்கொள்ளப் பெறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/166&oldid=865943" இலிருந்து மீள்விக்கப்பட்டது