பக்கம்:மானிட உடல்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் இனப்பெருக்க மண்டலம் 星6直 டாக்கும் உயிரணுக்கள் வளர்ச்சிபெற்று உடன்நிலைப் பாலறி குறிகளாகிய காடி, தாழ்ந்த குரல், தசை வளர்ச்சி, இன்மேந் தியே வளர்ச்சி ஆகியவை விரைவாகத் தோன்றுகின்றன. விரைகள் இல்லாதபொழுது அவ்வித மாற்றங்கள் நிகழாத தால், அவை அண்ட்ரோஜென் உற்பத்தியுடன் தொடர்பு கொண்டுள்ளன என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. விரகறியும் பருவத்தில் அண்ட்ரோஜென்களின் அள்வுகளில் திடுமென்ற மாற்றம் இல்லாததால், ஒரு வேளை அண்ட்ரோஜென்களால் பாதிக்கப்பெற்ற இழையங்கள் அந்தப் பருவத்தில் உணர்ச்சி மிக்கதாக ஆகக் கூடும். விசைகள்தாம் இளமைப் பருவத்திலும் நடுக்கா வயது காலத்திலும் ஆண் பாலறி - குறிகளே நிலைநிறுத்துவதற்குப் பொறுப்பாக அமைந்துள்ளன. எனினும், அவை புணர்ச் காட்டக்கிற்கு இன்றியமையாதவை அன்று. விசைகளற்ற பேடியும்கூட, புணர்ச்சி என்னும் செயலைக் கொண்டுசெலுத்த முடியும். வயதிற்கேற்ற பண்புகளுக்கும் சுறுசுறுப்பாக இயங் கும் விசைகளுக்குமுள்ள தொடர்புதான் யாவரும் கவர்ச்சி யுடன் கவனிக்கும் பொருளாகும். எல்லா உறுப்புக்களிலும் வயதிற்கேற்றவாறு வளர்ச்சியில் காணப்பெறும் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை ; தெளிவாக அறியப்பெருதவை; அம் மாற்றங்களுக்கும் பலன்தரும் வளமைக்கும் தொடர்பு இல்லை. புணர்ச்சிச் செயலே சுறுசுறுப்பாகக் கொண்டுசெலுத் தும் ஒரு ஆண்மகனிடம் நாம் முதுமைப் பருவத்திற்கு ஏற் றிச் சொல்லும் இழைய மாற்றங்கள் காணக் கூடும். இதற்கு மாருக திடகாத்திரமாகவும் கன்னிலையிலும் காணப்பெறும் வேருெரு ஆண்மகன் பலன்தரும் வளமையற்ற நபாாகt இருத்தல் கூடும் ; மலடான ஒரு மணவாழ்க்கையில் அவர் தான் வளமையற்ற நபர். இவ்வுண்மையை நன்கு அறியாக காரணத்தால் பெரும்பாலோர் மலட்டுத் தன்மையை தவருக ஆண்மகனேவிட பெண்மகளுக்கு ஏற்றிச் சொல்லுகின்றனர்.

  • Fertility. *Non-fertile member. மா. உ. 11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/185&oldid=865984" இலிருந்து மீள்விக்கப்பட்டது